தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் நிலைபாடு குறித்து 5 ஆம் தேதி அறிவிப்பு… சரத்குமார் பேட்டி

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து வருகிற 5 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தூத்துக்குடியில் போட்டியிடவில்லை என கூறினார். அதேநேரம், கூட்டணியில் இடம் பெறுவது அல்லது தனித்து நிற்பது என்பது குறித்து வருகிற ஐந்தாம் தேதி தங்களது நிலைப்பாட்டை வெளியிட இருப்பதாக சரத்குமார் கூறினார்.

There is no contest in Tuticorin Says Sarath Kumar

முன்னதாக, தூத்துக்குடியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போட்டியிட்டால், அவரை எதிர்த்து சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளிக்கும் விதமாக சரத்குமார் தூத்துக்குடியில் போட்டி இல்லை என தெரிவித்துள்ளார்.

தங்களுக்கே எதிராக மாறியதால், அபிநந்தன் வீடியோக்களை அவசரமாக அகற்றிய பாகிஸ்தான்தங்களுக்கே எதிராக மாறியதால், அபிநந்தன் வீடியோக்களை அவசரமாக அகற்றிய பாகிஸ்தான்

தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றனர்.

கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க போவதாக கமல்ஹாசன் அறிவித்துவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Sarath Kumar interview : on 5th Announcement Of Election Position
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X