தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேர்ல வேணாம்..‘வீடியோ’ கான்பிரன்சிங் ஓகே.. தூத்துக்குடியில் ‘மனு’ கொடுத்த ரஜினி வக்கீல்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக விருப்பம் தெரிவித்துள்ளார் என அவரது வழக்கறிஞர் மனு கொடுத்துள்ளார்.

Recommended Video

    தூத்துக்குடி: நேர்ல வேணாம்..‘வீடியோ’ கான்பிரன்சிங் ஓகே.. ஆணையத்திடம் ‘மனு’ கொடுத்த ரஜினி வக்கீல்..!

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மாவட்டஆட்சி தலைவர் அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டனர். அப்போது அவர்களை கலைக்க துப்பாக்கி சூடு, தடியடி நடத்தினர். இந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Thoothukudi gun shooting: Rajinikanth expected to appear in person during the investigation

    இதையடுத்து உடனடியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அந்த ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. அதேநேரம் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

    இந்த ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகிறார். அதன்படி, ஏற்கனவே 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 586 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 775 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் 24-வது கட்ட விசாரணையை விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கினார். இந்த விசாரணையில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்த், அரசு ஆஸ்பத்திரி டீன், கலவரத்தின்போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள், தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், தீயணைப்பு துறையினர் உள்பட மொத்தம் 56 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டு இருக்கிறது.
    இதில் நேற்று 11 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களில் இருந்து சும்மா கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.. கமல்ஹாசன் காட்டம் ரஜினிகாந்த் சொன்ன விஷயங்களில் இருந்து சும்மா கிளறிக் கொண்டிருக்க வேண்டாம்.. கமல்ஹாசன் காட்டம்

    இந்நிலையில், ரஜினிகாந்த் ஆஜராகவில்லை. இதற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி நேரில் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணை ஆணையத்திடம் ரஜினிகாந்திடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம். தூத்துக்குடி விசாரணை ஆணையத்தின் வீடியோ கான்பரன்சிங் விசாரணை நடத்த வசதியில்லாததால் சென்னையில் வைத்து விசாரணை நடத்தலாம் என்று ஆனையம் தெரிவித்துள்ளது. இரண்டு மாத கால அவகாசத்திற்க்கு பிறகு விசாரணை நடக்கலாம் என்றார்.

    English summary
    Actor Rajinikanth expected to appear in person during the investigation into the 2018 gun shooting incident in Thoothukudi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X