தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொந்த தம்பியை இரக்கமே இல்லாமல் சுட்டு கொன்ற திமுக பிரமுகர்.. திருவனந்தபுரத்தில் பிடித்தது போலீஸ்

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    நள்ளிரவில் தம்பியை சுட்டு கொன்ற திமுக நிர்வாகி- வீடியோ

    தூத்துக்குடி: சொந்த தம்பியையே நடுராத்திரி துப்பாக்கியால் சுட்டு கொன்ற அண்ணனை போலீசார் ரவுண்டு கட்டி கைது செய்தனர்!

    தூத்துக்குடி மாவட்ட கடை பகுதியை சேர்ந்தவர் பில்லா ஜெகன். வயது 43 ஆகிறது. இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அணி அமைப்பாளர். இன்னும் சொல்லப்போனால் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் ஆவார்! மேலும் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும்கூட!

    சொந்தமாக லாரி புக்கிங் ஆபீஸ் ஒன்றினை நடத்தி வருகிறார். இருந்தாலும் இவர் மீது கொலை உள்ளிட்ட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதாம்! ஜெகனுக்கு 3 தம்பிகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே ஜெகன் மீது ரொம்பவே பாசம் வைத்திருப்பவர்கள். தம்பிகள் 3 பேர் கைகளிலுமே அண்ணன் ஜெகனின் பெயரை பச்சை குத்தி உள்ளார்களாம்.. அவ்வளவு அன்பு!

    அதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை! அதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை!

    நச்சரிப்பு

    நச்சரிப்பு

    ஜெகனின் கடைசி தம்பிதான் சிம்சன். வயது 32 ஆகிறது. 2016-ல்தான் கல்யாணம் ஆகி இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. கொஞ்ச நாளாகவே சொத்தை பிரித்து தரும்படி சிம்சன் அண்ணனை நச்சரித்து வந்திருக்கிறார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

    தம்பி சிம்சன்

    தம்பி சிம்சன்

    பிறகு அன்றைய இரவே அண்ணன்-தம்பிக்குள் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. ஜெகன் வீட்டு மாடியில்தான் இந்த மோதல் வெடித்துள்ளது. அந்த நேரத்தில் போதையில் இருந்த ஜெகன், தன்னிடமிருந்த துப்பாக்கியால் சிம்சனை தாறுமாறாக சுட்டார். இதில் தலை, தொடைகளில் குண்டு பாய்ந்த சிம்சனை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும் காப்பாற்ற முடியவில்லை.

    வெடிக்காத தோட்டாக்கள்

    வெடிக்காத தோட்டாக்கள்

    இதனிடையே கண்ணெதிரில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த தம்பியை பார்த்ததும், அண்ணன் ஜெகன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். வெடித்த நிலையில் ஒரு தோட்டா, வெடிக்காத தோட்டாக்களை கைப்பற்றினர்.

    தப்பி ஓடினார்

    தப்பி ஓடினார்

    கணவனை கொன்றதாக சிம்சனின் மனைவி வடபாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தப்பிய ஓடிய ஜெகனை போலீசார் தேடி வந்தனர். இந்த சமயத்தில்தான், கேரளாவுக்கு ஜெகன் தப்பி ஓடிவிட்டதாக ஒரு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் கேரளா விரைந்தனர்.

    கோவளம்

    கோவளம்

    திருவனந்தபுரம் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இறுதியில், திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளத்தில் ஜெகனை சுற்றி வளைத்து கேரள போலீசார் கைது செய்து தூத்துக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    English summary
    Thoothukudi Vijay fan club chairman Jagan arrested in Kerala for killed his brother
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X