தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூத்துக்குடி.. சர்ச்சை பேச்சு.. ரஜினியை விசாரிக்க போவதாக ஆணையம் தகவல்..!

ரஜினிக்கு சம்மன் அனுப்ப போவதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது!
தூத்துக்குடியில், கடந்த 2018-ல், மே மாசம் 22-ந் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் அநியாயமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது..

Recommended Video

    #BREAKING தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- ரஜினிக்கு சம்மன்..!

    இதில், இதுவரை 22 கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. மொத்தம் 544 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது... இதைதவிர, 679 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன.

    இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. அதிமுக செய்யத் தவறியதை.. கையில் எடுத்த கமல், ரஜினி, பாஜக.. ! இது லிஸ்ட்டிலேயே இல்லையே.. அதிமுக செய்யத் தவறியதை.. கையில் எடுத்த கமல், ரஜினி, பாஜக.. !

     விசாரணை

    விசாரணை

    தற்போது, 23-வது கட்ட விசாரணை கடந்த 14-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.. தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில், அருணா ஜெகதீசன் இந்த விசாரணை நடந்து வருகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி வருகின்றனர்.. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக ரஜினிகாந்துக்கும் சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் கூறியுள்ளது.

    சர்ச்சை

    சர்ச்சை

    துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, செய்தியாளர்களிடம் ரஜினி பேசியபோது, "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம்... போலீஸை மட்டும் குறை சொல்வது தவறு... ஏன்னா, மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் போலீஸ்தான்.. புனிதமான போராட்டம் கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது" என்று கூறியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சையானது.. பல அமைப்பினர்களும் கொந்தளித்தனர்.

     சீமான்

    சீமான்

    அப்படித்தான் ஒருநாள் சீமான் ஆவேசமானார்.. "ஸ்டெர்லைட் போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று ரஜினி சொன்னாரே.. இந்த விஷயம் அவருக்கு எப்படி தெரியும்? அவர் என்ன உளவுத்துறையா வெச்சிருக்கிறார்? அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவே இருந்தாலும் பயங்கரவாதிகளை பிடித்துதானே நடவடிக்கை எடுத்திருக்கணும். அதைவிட்டுவிட்டு, அப்பாவி மக்களை ஏன் சுட்டாங்க? பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாக அன்னைக்கு ரஜினி பேசியது குறித்து அவருக்கு சம்மன் அளிக்க வேண்டும். இதை பற்றி நானே நீதிபதியிடம் வலியுறுத்த போகிறேன்" என்றார்.

     விளக்கம்

    விளக்கம்

    தொடர்ந்து ரஜினிக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.. ஆனால் ரஜினி அப்போது ஆஜராகவில்லை. நேரில் ஆஜராகாதது குறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது... மேலும் அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கும் கேட்கப்பட்டது... உச்சநட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் என்பதால், ஆஜராகும்போது ரசிகர்கள் அதிகளவில் கூடிவிடுவார்கள்.,. அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும்... எனவே நேரில் ஆஜராக விலக்கு தர வேண்டும்,,, கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் என்று ரஜினி தரப்பில் சொல்லப்பட்டிருந்தது.ஆனால் ஆணையம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

     ஜனவரி மாதம்

    ஜனவரி மாதம்

    இந்நிலையில், ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என்று இன்று ஆணையம் தெரிவித்துள்ளது.. வருகிற ஜனவரி மாதம் ஆணையத்துக்கு வந்து விளக்கம் அளிக்க, ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என்று ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த மாதம் ரஜினி ஆணையம் முன்பு ஆஜராவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி ஆரம்பிக்கும் பிஸியில் ரஜினி இருக்கும்போது, சம்மன் அனுப்பப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    Thoothukudi Sterlite Enquiry Commission has decided to send a summons to Rajinikanth
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X