தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? வேண்டாமா?.. மக்களிடம் கருத்து கேட்பு.. கலெக்டர் சொன்ன ஸ்வீட் தகவல்!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினரிடம் கருதது கேட்பு கூட்டம் நடந்தது.

Recommended Video

    ஸ்டெர்லைட்-எத்தனை உயிர் போனாலும் திறக்கவிடமாட்டோம்: தூத்துக்குடி மக்கள் ஆவேசம் - வீடியோ

    தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை செயல்பட தொடங்கியதில்இருந்து அங்கு இருந்து வெளியேறும் நச்சு வாயுவால் ஆலை இருக்கும் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்ட்டனர்.

    கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா.. மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.. மீண்டும் முழு லாக்டவுன்? கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனா.. மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.. மீண்டும் முழு லாக்டவுன்?

    அப்பகுதி நிலத்தடி நீரும் காற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெகுண்டெழுந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர்.

    13 பேர் உயிரிழப்பு

    13 பேர் உயிரிழப்பு

    ஆனால் இந்த போராட்டத்தை ஒடுக்க 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர். இது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து அதனை அதிரடியாக மூடியது தமிழக அரசு.

    ஆக்சிஜன் தட்டுப்பாடு

    ஆக்சிஜன் தட்டுப்பாடு

    இந்த நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் ஆக்சிஜனுக்கு நாடு முழுவதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாசாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவித்து வருகிறது. நாட்டில் பல பகுதிகளில் சிறு, சிறு ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளது.

    வேதாந்தா நிறுவனம் மனு

    வேதாந்தா நிறுவனம் மனு

    ''இப்போ விட்டால் எப்போவும் ஆலையை திறக்க முடியாது'' என்று சூழ்நிலையை தங்களுக்கு சாதாகமாக மாற்ற நினைத்த வேதாந்தா நிறுவனம் ''ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அதில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறோம்'' என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தது. இதனை தொடர்ந்து நேராக உச்சநீதிமன்றத்துக்கு சென்ற வேதாந்தா நிறுவனம் '' ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி செய்யப்படும் 1000 டன் ஆக்சிஜனையும் இலவசமாக தருகிறோம்'' என்றது.

    ஆதரவு

    ஆதரவு

    வேதாந்தா நிறுவனத்தின் கருத்துக்கு அப்படியே தலையசைத்த மத்திய அரசு '' ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கலாம்'' என்று நீதிமன்றத்தில் கூறியது. ஆனால் தமிழக அரசுஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதன்பின்னர் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    மக்களிடம் கருத்து கேட்பு

    மக்களிடம் கருத்து கேட்பு

    இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள், அரசியல் கட்சியினரிடம் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டன.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உயர் போலீஸ் அதிகாரிகள் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். அப்போது ஏராளமான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது என கலெக்டர் செந்தில்ராஜிடம் கடும் வாக்குவதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கலெக்டர் உறுதி

    கலெக்டர் உறுதி

    அப்போது கூட்டத்தில் பேசிய கலெக்டர் செந்தில்ராஜ், '' ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி தரக்கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு. எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி தராது என்பதை உறுதியாக உங்களிடம் தெரிவிதது கொள்கிறேன்'' என்றார். இதனை கேட்டதும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேசையை தட்டி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    English summary
    Thoothukudi Sterlite plant be opened? Don't you A public hearing was held with the public and political parties on the issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X