தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்ம தூத்துக்குடி பசங்க.. மோசமானவனுங்க.. கோடு போட சொன்னா.. டிக்டாக் அட்டகாசம்.. தூக்கிய போலீஸ்

டிக்டாக் செய்த தூத்துக்குடி இளைஞர்களுக்கு நூதன தண்டன வழங்கப்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடியில் போலீஸ் வாகனம் மீது ஏறி நின்று டிக்டாக் செய்து அட்டகாசம் - வீடியோ

    தூத்துக்குடி: "தூக்கிட்டானுங்க..ம்மா.. நம்ம தூத்துக்குடி பசங்க.. ரொம்ப மோசமானவனுங்க.. கோடு போட சொன்னா ரோடுதான்" என்று போலீஸ் ஜீப் மேலேயே ஏறி நின்று கொண்டு டிக்டாக் செய்த இளைஞர்களை, இன்று நிஜமாகவே தூத்துக்குடி ரோட்டில் நிற்க வைத்துவிட்டனர் நம் போலீசார்!

    சில தினங்களுக்கு முன்பு ஒரு டிக்டாக் வீடியோ வெளியானது..அதில் தூத்துக்குடி இளைஞர்கள் 3 பேர் சம்பந்தப்பட்ட வீடியோ.. ஆயுதப்படை வளாகம் முன்பு நிறுத்தியிருந்த போலீஸ் ஜீப்பில் 3 பேருமே ஏறி நின்று கொண்டனர்.

    "தூக்கிட்டானுங்க..ம்மா.. நம்ம தூத்துக்குடி பசங்க.. ரொம்ப மோசமானவனுங்க.. கோடு போட சொன்னா ரோடுதான்..பத்துபேரு சுத்தி வளைச்சாலும், எங்க மனம் குறைஞ்சதில்லை" என்ற பாடலுக்கு வாயசைத்து டான்ஸ் ஆடினார்கள்.

    நெருங்கும் தூக்கு.. பதைபதைப்பில் நிர்பயா குற்றவாளிகள்.. திகார் ஜெயிலில் நடக்கப் போகும் ரிகர்சல்நெருங்கும் தூக்கு.. பதைபதைப்பில் நிர்பயா குற்றவாளிகள்.. திகார் ஜெயிலில் நடக்கப் போகும் ரிகர்சல்

    வீடியோ

    வீடியோ

    2 பேர் டான்ஸ் ஆட.. ஒருவர் இதை வீடியோ எடுத்துள்ளார்.. இதனை சோஷியல் மீடியாவிலும் பதிவிட, மிக வைரலாகிவிட்டது. போலீஸ் ஜீப்பின் மீது ஏறி நின்று டிக்டாக் செய்த இளைஞர்கள் யார் என்ற விசாரணையை தென்பாகம் போலீசார் நடத்தினர்.

    தண்டனை

    தண்டனை

    அவர்கள் பின்னர் முனியசாமிபுரம், லெவஞ்சிபுரத்தை சேர்ந்த ஷேக்குவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. 3 பேரையும் டிஎஸ்பி பிரகாஷ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தார்.. இப்படிதான் ஜீப் மேல ஏறி நின்று ஆடுவதா என்று கேட்டு.. அறிவுரையும் வழங்கினார்.. மேலும் இந்த தவறுக்கு ஒரு தண்டனையையும் தந்தார்.

    விளக்கம்

    விளக்கம்

    தூத்துக்குடி மார்க்கெட் சிக்னலில் நின்று 8 நேரம் டிராபிக்கை சரி செய்யவேண்டும் என்று சொன்னார். காவல்துறை பணி எவ்வளவு சிரமமானது என்பதை இந்த இளைஞர்கள் உணர வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தண்டனை என்று விளக்கம் சொன்னார்கள்.

    பாராட்டு

    பாராட்டு

    அதன்படியே 3 பேரும் மார்க்கெட் பகுதி சிக்னலில் நடுரோட்டில் 8 மணி நேரம் நின்று டிராபிக் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தண்டனையை வழங்கிய தூத்துக்குடி போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    English summary
    thoothukudi youngsters tik tok video on police jeep, and police instructed 3 to help to regulate the traffic in signal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X