தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா!

தூத்துக்குடியில் விரைவில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. விரைவில் வருகிறது இஸ்ரோ ஏவுதளம்.. இப்படி ஒரு காரணமா!

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரைவில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது.

    சென்னைக்கு அருகே ஆந்திராவின் எல்லையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் இருக்கிறது. இங்கிருந்துதான் இஸ்ரோ அனுப்பும் ராக்கெட்டுகள், சாட்டிலைகள், விண்வெளி திட்டங்கள் எல்லாம் ஏவப்படும்.

    தற்போது தூத்துக்குடியில் இதேபோல் ஏவுதளம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்று தற்போது விவரம் வெளியாகி உள்ளது.

    அருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா!அருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா!

    ஆசை

    ஆசை

    பல வருடங்களாக தூத்துக்குடி மக்களின் கோரிக்கையாக இது இருந்தது. தூத்துக்குடியில் எப்படியாவது விண்வெளி ஏவுதளம் அமைக்க வேண்டும். இதன் மூலம் எங்கள் மாவட்டம் வேகமாக வளரும் என்று அம்மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

    ஒப்புதல்

    ஒப்புதல்

    அதன்படி தற்போது தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் தற்போது அங்கு நிலம் தேடும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அங்கு கட்டுமான பணிகள் துவங்க உள்ளது.

    முக்கியம்

    முக்கியம்

    ஸ்ரீஹரிகோட்டாவை விட தூத்துக்குடிதான் இந்திய பெருங்கடலுக்கு அருகில் இருக்கிறது. இதனால் ஆராய்ச்சி பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்ய இந்த ஏவுதளம் மிகவும் பயன்படும், எளிதாக இருக்கும். ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இங்கு எளிதாக விண்வெளி ஏவுகணை சார்ந்த பொருட்களை கொண்டு செல்ல முடியும்.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    அதேபோல் பொதுவாக இஸ்ரோவின் கிரையோஜெனிக் என்ஜின்கள் எப்போதும் கன்னியாகுமரியில் உள்ள மஹேந்திரகிரியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து அந்த எஞ்சின்கள் ஸ்ரீஹரிகோட்டா கொண்டு செல்லப்படுகிறது. அதற்கு பதிலாக தூத்துக்குடியில் வைத்து ஏவுவது இன்னும் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆராய்ச்சி பணிகள் எளிதாகும் என்பதால் தூத்துக்குடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Government nods to build ISRO Launching Pad in Tuticorin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X