தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளிவேனை ஓட்டியபோது மாரடைப்பு.. 21 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவர்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : ஆறுமுகநேரியில் பள்ளி வேனை ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், 21 மாணவர்களை காப்பாற்றிவிட்டு டிரைவர் உயிரைவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே செல்வன் புதியனூரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (45), இவர், ஆறுமுகநேரியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

tuticorin school van drivers saves 21 students after heart attack died

நேற்று காலை வழக்கம் போல் வேனில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வேனில் 21 மாணவ மாணவிகளும், 5 ஆசிரியர்களும் இருந்தனர்.

மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு! மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு!

ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரை கடந்து வேனை ஒட்டிக்கொண்டு மோகன்ராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உயிருக்கு போராடிய நிலையிலும் மோகன்ராஜ், வேனின் வேகத்தை குறைத்து இடது பக்கம் திருப்பியதோடு, எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் அருகில் இருந்த வீட்டின் தடுப்பு சுவரில் லேசாக மோதி வேனை நிறுத்திவிட்டு உயிரைவிட்டார்.

உயிர் போகும் நிலையிலும், வேனில் இருந்த மாணவ மாணவிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர் செல்வராஜின் உடலை பார்த்து மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த விபத்து குறித்து அறிந்து வந்த ஆறுமுகநேரி போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
school van drivers saves 21 students after heart attack died in arumaganeri, tuticorin district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X