தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விரைவில் அப்பா முதல்வராவார்.. மக்களின் துயரை துடைப்பார்.. தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    சரமாரி கேள்வி கேட்ட உதயநிதி.. மக்கள் கைத்தட்டல்!- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என தெரிவித்தார்.

    கமல்ஹாசன் கிராம சபை கூட்டங்களை முன்வைத்தார். ஆனால் ஸ்டாலினோ அதை அப்படியே ஸ்லைட்டாக மாற்றி ஊராட்சி சபை கூட்டம் என முன்னெடுத்தார். கிராமம்தோறும் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

    அண்மைகாலமாக தீவிர அரசியலில் குதித்துள்ள உதயநிதி, ஊராட்சி சபா கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தினார். முதலில் திண்டுகல்லில் நடந்த கூட்டத்திலும், ஆண்டிப்பட்டியில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

    மக்களிடம் குறை

    மக்களிடம் குறை

    இந்த நிலையில் மூன்றாவது கூட்டமாக நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் அருகே நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர் பேசுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் முதல்வராக பதவியேற்பார். மத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.

    உதயநிதி

    உதயநிதி

    ஒரு மணி நேரமாக மக்களுடன் மக்களாக பேச்சு கொடுத்தார் உதயநிதி. இதை பார்க்கும் போது உதயநிதி ஸ்டாலின் அடுத்த ஸ்டாலினாக உருவெடுக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிடலாம் என கருத்துகள் நிலவி வந்த நிலையில் இவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    சர்ச்சை

    சர்ச்சை

    உதயநிதியின் ஊராட்சி சபை கூட்டத்தை இன்னும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னணி தலைவர்கள் இருக்க உதயநிதியின் புகைப்படம் பேனரில் இருந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    உதயநிதி

    உதயநிதி

    முன்னணி தலைவர்கள் சும்மா இருக்க உங்கள் படம் பேனரில் இடம் பெறும் அளவிற்கு என்ன தகுதி உங்களுக்கு உள்ளது என உதயநிதியிடம் டுவிட்டரில் கேட்டிருந்தார். அதற்கு உதயநிதியோ தவறுதான். இனி இப்படி நடக்காது என்றார்.

    அழகிரிக்கு பதில்

    அழகிரிக்கு பதில்

    இனி இப்படி நடக்காது , இனி இப்படி நடக்காது என்று கூறியே உதயநிதி தன்னை முன்னிலைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். மேலும் அழகிரியோ அவரது குடும்பத்தினரோ திமுகவுக்கு வந்துவிட கூடாது என்பதாலும் உதயநிதி தயார்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    English summary
    Stalin's son Udhayanidhi Stalin is getting stronger in DMK as he leads 3 Panchayat Sabha meetings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X