தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி நாட்டிற்கு சாபகேடு.. ஆளுநர் தமிழகத்திற்கு சாபகேடு... வைகோ காட்டம்

பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபகேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர் தமிழகத்திற்கு சாபகேடு - வைகோ

    கோவில்பட்டி: பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபகேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி குறித்து, ஆளுநர் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

    Vaiko urges that action should taken against governor Banwari Lal Purohit

    [போதை இளைஞர்களை அடித்து உதைத்த மதிமுகவினர்.. வருத்தம் சொன்னார் வைகோ ]

    அதில் அவர் கூறியதாவது, பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபகேடு. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது.

    இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    பேருந்து எரிப்பு வழக்கில் 3 அப்பாவி மாணவிகள் உயிரிழப்புக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறும் செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன் ? இதற்கு எதிராக நாளை போராட்டம் நடக்க உள்ளது.

    இதனை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு தி.மு.க. முழு ஒத்துழைப்பு தருகிறது. இதில் நாங்கள் அனுமதி கேட்ட இடம் வரை செல்ல போலீசார் அனுமதி தர மறுத்தால், ஜல்லிக்கட்டு போல் மிகப்பெரிய அளவில் போராட்டமாக மாறும் என்று கூறினார்.

    English summary
    Vaiko urges that action should taken against governor Banwari Lal Purohit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X