தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தே பாரத்: இலங்கையில் சிக்கிய 700 இந்தியர்கள் கப்பல் மூலம் இன்று இந்தியாவுக்கு புறப்படுகின்றனர்

Google Oneindia Tamil News

கொழும்பு/தூத்துக்குடி: கொரோனா லாக்டவுனால் இலங்கையில் சிக்கிய 700 இந்தியர்கள் கப்பல் மூலம் இன்று அங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கொரோனா லாக்டவுனால் உலக நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் தத்தளித்து வருகின்றனர். இவர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூலம் விமானங்கள், கப்பல்கள் மூலம் மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் இயங்கி வருகிறது.

Vande Bharat mission: INS Jalashwa to Bring Back 700 Indians From Sri Lanka

வந்தே பாரத்தின் கீழான சமுத்திர சேது என்கிற பெயரிலான ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கை, மாலத்தீவுகளில் சிக்கிய இந்தியர்களை தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கை இது.

இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல்தான் இந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இன்று இலங்கையில் இருந்து 700 இந்தியர்கள் இன்று புறப்படுகின்றனர்.

என்னாது தமிழகத்தில் இ-பாஸ் தேவையில்லையா? யார் சொன்னது? பொத்தாம் பொதுவாக வைரலாகும் தகவலால் குழப்பம்என்னாது தமிழகத்தில் இ-பாஸ் தேவையில்லையா? யார் சொன்னது? பொத்தாம் பொதுவாக வைரலாகும் தகவலால் குழப்பம்

இவர்கள் அனைவரும் நாளை தூத்துக்குடி வந்தடைய உள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் 700 பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யவும் அனைவரையும் உரிய இடங்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

English summary
Indian Navy ship INS Jalashwa will sail from Colombo Port today to bring back 700 stranded Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X