தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனமழை கொட்டினாலும் கடமைத் தவறாத போக்குவரத்து காவலர்.. தூத்துக்குடி எஸ்பி பாராட்டு.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழையிலும் கடமைத் தவறாது பணியாற்றிய தூத்துக்குடி போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Recommended Video

    கொட்டித் தீர்க்கும் கனமழையிலும் கடமை தவறாது பணி செய்யும் போக்குவரத்து காவலர் - வீடியோ

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் நவம்பர் 18 வரை மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    கனமழை

    கனமழை

    இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. 90 நிமிடங்களில் 100 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது 10 செ. மீ அளவுக்கு அடி அடியென அடித்துவிட்டது. தூத்துக்குடி மட்டுமல்லாமல் அண்டைய மாவட்டங்களான நெல்லை, குமரியிலும் மழை கொட்டி வருகிறது.

    வீடியோ

    வீடியோ

    நீர் நிலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி போக்குவரத்து காவலர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மழை கொட்டி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாத காவலர் முத்துராஜா, மழை உறை அணிந்து கொண்டு போக்குவரத்தை சீர் செய்தார்.

    எஸ்பி பாராட்டு

    எஸ்பி பாராட்டு

    கொட்டும் மழையிலும் இவரது கடமை உணர்ச்சி தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமாரின் காதுகளுக்கு சென்றடைந்தது. இதையடுத்து அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்த எஸ்பி அவரை பாராட்டி, பரிசை வழங்கினார். அண்மையில் மழை பெய்ததால் சாக்கடையில் தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கியதை கண்ட போலீஸார் கைகளை விட்டு அடைப்பை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    மறுக்க முடியாது

    மறுக்க முடியாது

    அது போல் கொரோனா ஊரடங்கு நேரத்தில் போலீஸ்காரர் ஒருவர் சென்னையில் வெளியே வந்த வாகன ஓட்டிகளிடம் மன்றாடி கேட்டு கொண்ட சம்பவம் பாராட்டை பெற்றது. அது போல் கொரோனா காலத்தில் கொரோனா போராளிகளாக இருந்து போலீஸார் உழைத்ததை யாராலும் மறுக்கவே முடியாது.

    English summary
    Tuticorin Traffic police works in heavy rain. Superintendent of Police praises him and gifted.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X