தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த எல்லைக்கும் அதிமுக போகும்.. சபாநாயகருக்கு செக் வைச்சுட்டோம்... ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    எந்த எல்லைக்கும் அதிமுக போகும்..ஸ்டாலின் பரபரப்பு பேச்சு-வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இப்போது 4 தொகுதி இடைத்தேர்தல் தாமதமாக வந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

    மே 1ம் தேதியான இன்று ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையாவிற்கு ஆதரவாக வாக்காளர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தினார்.

    அப்போது முக ஸ்டாலின் பேசுகையில். ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதறக்காகவே 4 தொகுதி இடைத்தேர்தல் தாமதாக வந்துள்ளது

    மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி.. ஐநா அறிவிப்பு.. இறங்கி வந்த சீனா.. இந்தியாவுக்கு வெற்றி! மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி.. ஐநா அறிவிப்பு.. இறங்கி வந்த சீனா.. இந்தியாவுக்கு வெற்றி!

    4 தொகுதி தேர்தல்

    4 தொகுதி தேர்தல்

    ஏற்கனவே நடத்தப்பட்ட 18 தொகுதி இடைத்தேர்தலுடன் சேர்ந்து இங்கு தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 22 தொகுதிகளில் தேர்தல் நடத்தால் திமுக வென்றுவிடும் என்பதால் நடத்தப்படவில்லை.இதற்கு எதிராக திமுகதான் நீதிமன்றம் சென்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது அதன்பின்பே தற்போது 4 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆளும் கட்சி திட்டம்

    ஆளும் கட்சி திட்டம்

    இதற்கிடையில் தேர்தல் நடப்பதன் காரணமாக ஆளும் கட்சியினர் 3 பேரை குறைக்கலாமா என்று எண்ணி நேற்று நோட்டீஸ் அனுப்பினார்கள். திமுக இந்த சதியை புரிந்து கொண்டு சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஏனெனில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை என்றால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே அவருக்கு ஒரு செக் இப்போது வைத்திருக்கிறோம். ஆனால் அதையும் மீறி ஜனநாயகத்தை கடைபிடிக்காமல் இந்த ஆட்சி போகும்.

    18 தொகுதி தேர்தல்

    18 தொகுதி தேர்தல்

    அதற்கு காரணம் என்னவென்றால், நடந்துமுடிந்த 39 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என்ற தகவல் திமுகவுக்கு வந்ததோ இல்லையோ ஆளும் கட்சிக்கு போய்விட்டது. அதேபோல் திமுகதான் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்லப்போகிறது என்ற தகவலும் வந்திருக்கிறது.

    ஆட்சியை தக்கவைக்க

    ஆட்சியை தக்கவைக்க

    ஆக திரிசங்கு நிலையில் இந்த ஆட்சி இருக்கிறது. ஆக குறைந்தது ஐந்து இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைக்க முடியும் என்ற சூழல் இப்போது ஆளும் கட்சிக்கு இருக்கிறது. அதனால்தான் 18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று, இப்போது 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் என்ன செய்வது என்று நினைத்தே 3 எம்எல்ஏக்களை குறைக்க அதிமுக திட்டமிட்டு செய்து வருகிறது.

    ஜனநாயகத்தை காக்க

    ஜனநாயகத்தை காக்க

    இதனால் திமுக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இப்போது போராடி வருகிறது. இதற்காகத்தான் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருகிறோம். தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம். ஏனெனில் மக்களின் பிரச்னைகளை தீர்க்க இந்த அரசு செயல்படவில்லை. நீங்கள் சொன்ன பிரச்னை தமிழ்நாடு முழுவதும் எல்லா கிராமங்களிலும் இருக்கிறது" இவ்வாறு கூறினார்.

    English summary
    dmk leader mk stalin says we give notice against tn assembly speaker dhanapal over 3 mlas issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X