தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனிமொழி இல்லத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்ன? வருமான வரித்துறை விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kanimozhi House Raid: கனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை..கனிமொழி காட்டம்

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது என்ன என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடி லோக்சபா தொகுதியில், திமுக சார்பில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கனிமொழி போட்டியிடுகிறார்.

    What seized from Kanimozhi house by Income Tax officials

    இவரை எதிர்த்து பாஜக சார்பில், அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். போட்டி பலமாக உள்ள நிலையில், ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் அளவிற்கு பணம் பட்டுவாடா நடப்பதாக புகார்கள் வந்தன.

    சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை.. அச்சுறுத்துவதற்காகவே சோதனை- கனிமொழி விளக்கம்சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை.. அச்சுறுத்துவதற்காகவே சோதனை- கனிமொழி விளக்கம்

    இந்த நிலையில்தான், நேற்று கனிமொழி தங்கியிருந்த குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை நடைபெறும் போது, உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. உள்ளே இருந்து வெளியேயும் யாரையும் அனுமதிக்கவில்லை.

    இந்த சோதனை கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு, கனிமொழி இல்லத்திலிருந்து பணமோ, பொருளோ கைப்பற்ற முடியவில்லை, என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, வருமானவரித்துறையினர் வெறுங்கையோடு திரும்பி உள்ளனர். தங்களுக்கு கிடைத்த தகவல் தவறானது என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வருமானவரித்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    IT sources says, The information we received found false. Teams return. No case registered against her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X