வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வயிறெல்லாம் எரியுதுங்க.. வீணாக திறந்து விடப்பட்ட 10 லட்சம் லிட்டர் குடிநீர்.. ஜோலார்பேட்டை பரிதாபம்

ஜோலார்பேட்டை.. ரயில் வேகன்களில் இருந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக போனது

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Water crisis | திறந்து விடப்பட்ட 10 லட்சம் லிட்டர் குடிநீர்.. ஜோலார்பேட்டை பரிதாபம்- வீடியோ

    வேலூர்: "குடிக்க கூட எங்களுக்கு தண்ணியில்லை.. ஆனா இவ்ளோ தண்ணி இப்படி அநியாயத்துக்கு வீணா போகுதே" என்று பொதுமக்கள் வயித்தெரிச்சலுடன் சொல்கிறார்கள்.

    சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ப்பதற்காக ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்து அதற்காக ரூ.65 கோடி நிதியும் ஒதுக்கியது. இதற்காக அதிகாரிகள் 3 கட்டமாக ஆய்வும் அங்கு நடத்தினர்.

    இதற்காக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. அந்தசமயத்தில் ஏதோ கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேறியது. ஆனால், 2 மணிநேரம் போராடி அது சீர் செய்யப்பட்டது. அதன்பிறகு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.

    நதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்கு ஒரே தீர்ப்பாயமா? தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு- வைகோநதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்கு ஒரே தீர்ப்பாயமா? தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு- வைகோ

    அறிவுரை

    அறிவுரை

    இதையடுத்து, நேற்று இரவு 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணி விடிய விடிய நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு வேகன்களிலும் முதலில் 54 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஏற்றினர். அப்போது ஒவ்வொரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தான் ஏற்றவேண்டும் என்று கூறினர்.

    சென்னை

    சென்னை

    எப்படியும் இன்று மதியம் சென்னைக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டேங்கர் லாரிகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அளவுக்கு அதிகமாக தண்ணீரை ஏற்றியிருந்தது தெரியவந்தது.

    சோதனை

    சோதனை

    50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டும் டேங்கரில் ஏற்றுமாறு அதிகாரிகள் சொல்லி உள்ள நிலையில், 70 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஏற்றி வைத்துள்ளனர். பிறகு அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி ஒவ்வொரு டேங்கரில் இருந்தும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    தண்டவாளம்

    தண்டவாளம்

    கிட்டத்தட்ட 10 லட்சம் லிட்டர் தண்ணீர் அப்படியே அப்படியே தண்டவாளங்களில் கொட்டப்பட்டது. ஏற்கனவே குடிநீர் இல்லை என்று மறியல் செய்த பொதுமக்களில் சிலர் இதை பார்த்து மனம் பதறியவாறே சென்றனர். எனினும் இன்று இரவுக்குள் சென்னைக்கு தண்ணீர் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    In Jollarpettai, 10 lakhs of liters of water was waster from the train wagons in the railway tracks today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X