வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாணியம்பாடியில் சிறப்பு வகுப்புக்காக பள்ளி சென்ற 11-ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து பலி!

Google Oneindia Tamil News

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து 11-ஆம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பெரும் ராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகாலட்சுமி. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மகாலட்சுமி இன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்தார்.

பலி

பலி

இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவி மகாலட்சுமி பள்ளியின் 3-ஆவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தீடீரென கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.

சாலை மறியல்

சாலை மறியல்

இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கும் மாணவியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் சடலத்தை எடுத்து செல்ல முயன்ற போது மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் பள்ளி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உறுதிமொழி

உறுதிமொழி

மேலும் இந்த விபத்து குறித்து பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சடலத்தை எடுக்கவிடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசார் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சோகம்

சோகம்

இதுகுறித்து ஆலங்காயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாரா, இல்லை யாரேனும் அவரை தள்ளி விட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி பள்ளியில் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

English summary
A 11th standard student from Vaniyambadi who jump out from the school terrace died. Police investigation going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X