வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

80 கோடி பணத்துடன் பாதி வழியில் நின்ற லாரி... வேலூரில் திக் திக் திக் நிமிடங்களால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    80 கோடியுடன் பாதி வழியில் நின்ற லாரி, வேலூரில் பரபரப்பு!- வீடியோ

    வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 80 கோடி ரூபாய் பணத்துடன் கண்டெய்னர் பழுதாகி நடுவழியில் நின்றது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னையில் இருந்து ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு கண்டெய்னர் லாரியில் ரூபாய் 80 கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியின் பணம் எடுத்துச் செல்லப்பட்டது.

    80 crores of RBI Bank Money

    அப்போது, கண்டெய்னர் லாரி திடீரென்று விண்ணமங்கலத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு பழுதானது. இதனையடுத்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் செங்கிலி குப்பம் பகுதியில் இயங்கும் அசோக் லைலேண்ட் என்ற பழுது பார்க்கும் சர்வீஸ் சென்டருக்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து, பழுதை நீக்கிய பிறகு 25 நிமிடம் தாமதமாக, பாதுகாப்புடன் ஒசூருக்கு லாரி புறப்பட்டுச் சென்றது.

    80 crores of RBI Bank Money

    80 கோடியை கொண்டுச் சென்ற லாரி, நடுவழியில் பழுதாகி நின்றதை தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Around 80 crores rupees were taken to Hosur. While lorry Break down near Ambur. Chennai-Bangalore national highway had been scramble by the Gun police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X