வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் அருகே சோகம்.. 9-ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து விழுந்து சாவு

Google Oneindia Tamil News

Recommended Video

    கிளாஸ் ரூமிலேயே.. திடீரென கை, காலை உதைத்து.. வலிப்பு வந்து உயிரிழந்த மாணவி.. வெளியான சிசிடிவி காட்சி

    வேலூர்: வேலூர் அருகே சென்னாங்குப்பத்தில் 9-ம் வகுப்பு மாணவி வகுப்பறையில் வலிப்பு வந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் மாவட்டம் லத்தேரியைச் சேர்ந்தவர் நந்தகுமார். வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    A 9th grade student falls into a classroom and dies after Epilepsy in vellore

    இவரது மகள் நிவேதினி(14). கே.வி.குப்பம் அருகே உள்ள சென்னாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை மாணவி நிவேதினி பள்ளி வகுப்பறையில் வலிப்பு வந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மாணவி நிவேதினியை கே.வி.குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது தொடர்பான தகவல் மாணவியின் பெற்றோருக்கு வலிப்பு வந்ததாக தகவ்ல அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாணவியை மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு நிவேதினி பரிதாபமாக உயிரிழந்தார்.

    CAA: ரிச்சி தெருவில்.. பேனாவில் புகுந்து புறப்பட்ட சிஏஏ ஆதரவு பிரச்சாரம்.. கடை முன்பு களேபரம்CAA: ரிச்சி தெருவில்.. பேனாவில் புகுந்து புறப்பட்ட சிஏஏ ஆதரவு பிரச்சாரம்.. கடை முன்பு களேபரம்

    இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே மாணவி எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், தங்களது மகள் வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமைதிக்கப்பட்டுள்ளதாக பள்ளியில் இருந்து தகவல் சொனறார்கள் இதை கேட்டு பதறிபோய் நாங்கள். மேல்சிகிச்சைக்காக வேலூர் கொண்டு சென்றோம். அங்கு எங்களது மகள் உயிரிழந்துவிட்டதாக கூறினார்கள் என்று சோகத்துடன் தெரிவித்தனர்.

    English summary
    A 9th grade student falls into a classroom and dies after Epilepsy in vellore. police en query on school
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X