வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாணியம்பாடி: வாட்டர் ஹீட்டரில் கைவைத்த ஒன்றரை வயது குழந்தை.. மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

Google Oneindia Tamil News

வாணியம்பாடி: வாட்டர் ஹீட்டரில் கைவைத்த ஒன்றரை வயது குழந்தை.. மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே எவர்சில்வர் குடத்தில் தண்ணீர் நிரப்பி வாட்டர் ஹீட்டர் போட்டிருந்த நிலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அந்த குடத்தை தொட்டதை அடுத்து மின்சாரம் பாய்ந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கும் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்பள்ளிப்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தையுடன் வந்த பவித்ரா இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி உள்ளார்.

என்னாது நார்வே வன்முறையில் போலீஸாரின் கார் எரிப்பா.. பொய் செய்தி.. இது அமெரிக்கா வன்முறை!என்னாது நார்வே வன்முறையில் போலீஸாரின் கார் எரிப்பா.. பொய் செய்தி.. இது அமெரிக்கா வன்முறை!

சமையல் பணி

சமையல் பணி

இந்நிலையில் இன்று காலை பவித்ரா குளிப்பதற்காக தண்ணீரை வெப்பப்படுத்த மின்சார வாட்டர் ஹீட்டர் கருவியை சில்வர் குடத்தில் பொருத்தி தண்ணீர் காய வைத்துக் கொண்டிருந்தார். தண்ணீரை போட்டுவிட்டு அவர் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை அனன்யா தண்ணீரில் கையை வைத்தது. அப்போது மின்சாரம் தாக்கியதில் குழந்தை மயங்கி விழுந்தது. குடம் கீழே விழுந்த சப்தம் கேட்ட தாய் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

காவல் துறையினர்

காவல் துறையினர்

ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். சம்பவம் அறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திறந்த வெளி ஹீட்டர்

திறந்த வெளி ஹீட்டர்

வாணியம்பாடி அருகே பெற்றோரின் கவனக்குறைவால் திறந்தவெளியில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி குழந்தையின் உயிரை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று ஹீட்டர்களை பயன்படுத்தும் போது குழந்தைகள் அதை தொடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

English summary
Vaniyambadi: One and Half years old baby gets electric shock from water heater and died.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X