வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செத்துக் கொண்டிருந்த நாக நதி.. ஓடி வந்து உயிர் கொடுத்து மீட்ட 20,000 பெண்களின் ஈர மனசு!

Google Oneindia Tamil News

Recommended Video

    செத்துக் கொண்டிருந்த நாக நதி! மீட்ட பெண்கள்

    வேலூர்: வேலூரில் செத்துக்கொண்டிருந்த நாகநதியை 20 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து காப்பாற்றி உள்ளார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை சேமிக்கும் 3500 மீழ் கிணறுகளை கட்டி வருகிறார்கள். இந்த திட்டத்தை மற்ற நாட்டின் பகுதிகளிலும் செயல்படுத்தினால் தண்ணீர் பஞ்சம் நிச்சயம் ஏற்படாது என்பதே உண்மை.

    தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் 24 மாவட்டங்களில் ஒன்று தான் வேலூர். இங்கு எப்போதுமே வெயில் கொளுத்தும் இதனால் தண்ணீர் பஞ்சம் என்பது இங்கு பல ஆண்டுகளாக தீராத பிரச்ணையாக தொடர்ந்து வருகிறது.

    இதனால் இந்த பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நாகநதி சீரமைப்பு திட்டம். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நாகநதிதான் திருவண்ணாமலை மற்றும் வேலூரின் ஜீவாதாரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு திகழ்ந்தது.

    நாகநதியை காக்க முயற்சி

    நாகநதியை காக்க முயற்சி

    ஆனால் இந்த நதி கடந்த 15 ஆண்டுகளாக மெல்ல மெல்ல செத்துவந்தது. இதையடுத்து வாழும் காலை தன்னார்வலர்கள் கடந்த 2014 செப்டம்பர் முதல் நாகநதியை காக்கும் முயற்சியில் இறங்கினர். இவர்களோடு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிந்த பெண்களும் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள்.

    வாழும் கலை தொண்டர்கள்

    வாழும் கலை தொண்டர்கள்

    நாகநதியை காக்க இந்த குழு செய்தது முக்கியமான விஷயம் மீழ் கிணறுகளை அமைத்ததுதான். பொதுவாக நீர் நிலைகளில் தடுப்பணைகளை கட்டினால் அவை சில நேரங்களில் ஆபத்தானதாக மாறிவிடுகிறது. மேலும் தேங்கும் தண்ணீர் ஆவியாவதுடன், நிலத்தடி நீரின் அளவும் குறைந்துவிடுகிறது. எனவே தடுப்பணைகள் அருகில் மீழ் நிரப்பு கிணறுகளை அமைப்பது தான் தீர்வு என முடிவு செய்த வாழும் காலை குழு தொண்டர்கள் இந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். சுமார் 20 ஆயிரம் பெண்கள் வேலூர் மாவட்டத்தில் இந்த பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    210 செக் டேம்கள்

    210 செக் டேம்கள்

    தற்போது வரை 350 மீழ் கிணறுகளும், 210 செக் டேம்களும் கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கிணறும் 20 அடி ஆழம் 15 நீளம், 6அடி அகலம் என்ற அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு கிணறு அமைக்க 23 நாட்களும் 10 வேலை ஆட்களும் தேவைப்படுகிறதாம். தற்போது வரை வேலூரின் கன்னியம்பாடி பகுதியில் நாகநதி கால்வாய்கள் புணரமைப்பு வேலை நடந்து வருகிறது. மீழ் கிணறுகள் அமைக்கப்பட்டதன் காரணமாக வேலூர் கன்னியம்பாடி பகுதி கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. முன்பெல்லாம் வற்றிகிடந்த கிணறுகள், புணரமைபுக்குபின் பெய்த மழையால் நிறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தண்ணீர் பஞ்சம் வராது

    தண்ணீர் பஞ்சம் வராது

    இதேபோல் ஒவ்வொரு நதி செல்லும் பாதையை புணரமைத்து மீழ் கிணறுகளை அமைத்தால் நிச்சயம் தண்ணீர் சேமிக்க முடியும். அந்த பகுதி விவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் உயரும். எனவே அருமையான இந்த திட்டம் தண்ணீர் பஞ்சம் மிகுந்த நம் தேசத்திற்கு மிக அவசியான ஒன்றாகும்.

    English summary
    a group of 20000 womens saved dead naganathi river in vellore, they spend 5 years and build 3500 recharge wells in accross river
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X