வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தன்று தானமாக வழங்கிய இளைஞர்.. வேலூரில் சோகம்

Google Oneindia Tamil News

Recommended Video

    காதலர் தினத்தன்று மனைவியின் இதயத்தை தானமாக வழங்கிய கணவர்- வீடியோ

    வேலூர்: மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தின் போது வேறு ஒரு நபருக்கு தானமாக கொடுக்க முன்வந்த கணவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம்ராஜ். இவரது மனைவி கோகிலா. பெங்களூரில் கவுதம்ராஜ் பணியாற்றி வருவதால் இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கோகிலா கர்ப்பம் அடைந்தார். 7 மாத கர்ப்பிணியான கோகிலாவுக்கு திடீரென ரத்தஅழுத்தம் அதிகரித்தது.

    இதையடுத்து கோகிலா வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு குறை மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

    5 உறுப்புகள்

    5 உறுப்புகள்

    பின்னர் மனதை தேற்றிக் கொண்டு கோகிலாவின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம், கணையம் ஆகிய 5 உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர்.

    5 உறுப்புகள்

    5 உறுப்புகள்

    பின்னர் மனதை தேற்றிக் கொண்டு கோகிலாவின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம், கணையம் ஆகிய 5 உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர்.

    இதயம்

    இதயம்

    எனினும் கோகிலாவின் இதயத்தை காதலர் தினமான இன்றே யாருக்காவது தானமாக கொடுக்க வேண்டும் என கவுதம்ராஜ் மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி இன்றைய தினம் அவரது இதயம் சென்னை மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    உதவும் குணம்

    உதவும் குணம்

    இதுகுறித்து கவுதம்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில் எங்களது திருமணம் பெரியோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான். கோகிலாவுக்கு எப்போதும் எல்லாருக்கும் உதவும் குணம் இருந்தது.

    கண்ணீர் பேட்டி

    கண்ணீர் பேட்டி

    அவர் தயாளு குணம் படைத்தவர் என்பதால் அவருடைய இதயத்தை காதலர் தினத்தன்று தானமாக கொடுக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன். எனது குழந்தை நலமாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

    English summary
    A man who is a IT professional donates his wife's heart who had brain dead yesterday, in Valentine's day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X