வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு!

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ

    வேலூர்: வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ 500 கொடுக்குமாறு அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத் அறிவுறுத்தியுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அது போல் திமுக பிரமுகர் வீட்டிலும் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனினும் ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதியில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    வேலூருக்கு ஒரு நியாயம்.. குஜராத்துக்கு ஒரு நியாயமா? முஸ்லீம் லீக் சரமாரி கேள்விவேலூருக்கு ஒரு நியாயம்.. குஜராத்துக்கு ஒரு நியாயமா? முஸ்லீம் லீக் சரமாரி கேள்வி

    கூட்டணி கட்சியினர்

    கூட்டணி கட்சியினர்

    இந்த நிலையில் வேலூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத் பணத்தை எப்படி விநியோகம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

    பரபரப்பு

    பரபரப்பு

    அதில் ஏசி சண்முகத்துக்கு வாக்களிப்போருக்கு பணம் சேர வேண்டும். ஒரு ஓட்டுக்கு ரூ 500 தரலாம் என கூறும் கோவி சம்பத், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வது குறித்து விரிவான அறிவுறுத்தியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழைய வீடியோ

    பழைய வீடியோ

    இந்த நிலையில் பணம் விநியோகம் வீடியோ குறித்து கோவி சம்பத் விளக்கம் அளித்துள்ளார். அதில் அந்த வீடியோ பழைய வீடியோ. உடல்நலமின்றி அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறேன்.

    சதி

    சதி

    பழைய வீடியோவில் யாரோ என் குரலில் பேசி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது எதிர்க்கட்சியினரின் சதி என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    A Video released which shows that ADMK EX MLA Govi Sampath discusses with his party and ally parties about how to distribute money?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X