வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த 2 மணி நேரம்.. டென்ஷன் ஆன ஏ.சி. சண்முகம்.. நல்ல முடிவு சொல்லி கூல் ஆக்கிய தேர்தல் அதிகாரி!

ஏசி சண்முகத்தின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

வேலூர்: திடீரென வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளது என்று சொன்னதும், தூக்கி வாரிப்போட்டது ஏசி சண்முகத்துக்கு மட்டும் இல்லை. அதிமுகவுக்கும்தான்! 2 மணி நேர டென்ஷனுக்கு பின்னர்தான் நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டது.

கடந்த முறை தேர்தலில் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தார். திமுகவை 3-ம் இடத்தைதான் பிடிக்க வைத்து, 2-ம் இடத்துக்கு முன்னேறினார். போதாக்குறைக்கு பணத்துக்கு பஞ்சமே இல்லை.

அதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம் அதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்

செல்வாக்கு

செல்வாக்கு

துரைமுருகனின் செல்வாக்கு, அரசியல் பலம், பண பலம், வன்னியர் ஓட்டுக்கள் என எவ்வளவுதான் களத்தில் இறக்கப்பட்டாலும் எப்படியும் ஏசிஎஸ் வெற்றி பெற்று விடுவார் என்றுதான் அதிமுக இவரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தியது.

கேள்வி

கேள்வி

ஆனால் இப்போது வேட்பு மனு தாக்கல் தொகுதியில் முடிவடைந்த நிலையில், அதற்கான பரிசீலனை நடந்தது. அப்போது ஏசி சண்முகத்தின் வேட்பு மனு தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நிறுத்தி வைப்பு

நிறுத்தி வைப்பு

இதையே எதிர்க்கட்சிகளும் கேள்வி கேட்டதால் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார் என்றார்கள். இருப்பினும் உரிய கடிதத்தை அவர் அளித்தால் வேட்பு மனு ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சோதனை

சோதனை

தொடர்ந்து ஏசிஎஸ்-க்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருந்தது. தேர்தல் தினத்தன்றுகூட, 4 தொகுதி இடைத்தேர்தலின்போது வேலூருக்கு தேர்தல் நடத்தினால் நல்லா இருக்கும் என்று குலுங்கி அழுதவாறே சொன்னார். அதிமுகவுக்கென தேர்தல் நிதியும் அப்போதே தனியாக கொடுத்திருந்தார். இதைதவிர தொகுதிகள் விட்டதை பிடிக்க முடியாமல் தவித்து கொண்டுள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

2 நாளைக்கு முன்னாடி பிரச்சாரம் செய்யும்போதுகூட, இந்த தேர்தலையாவது ஒழுங்கா நடத்த விடுங்கள் என்று திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்போது, தேர்தல் அதிகாரியே இப்படி ஒரு விளக்கத்தை தந்ததால், ஏசி எஸ் தரப்பு ஷாக் ஆனது. கடைசியில், ஏ.சி.சண்முகம் அதிமுகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பிரதிநிதிகள் ஒப்படைத்தனர். அதன்பிறகுதான் வேட்பு மனு ஏற்கப்பட்டது. உறுப்பினர் அட்டை ஒப்படைத்த, அந்த 2 மணி நேரத்திற்குள் வேலூர் அதிமுகவே அலறி விட்டது!

English summary
Vellore AIADMK Alliance Candidate AC Shanmugams nomination has stopped temporarily
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X