வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம டஃப் கொடுத்த ஏசி சண்முகம்.. நூலிழையில் ஈஸியாக "எஸ்" ஆன கதிர்ஆனந்த்.. இதுதான் காரணம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Election Result : வேலூர் கோட்டையை கைப்பற்றியது திமுக. அதிமுகவிற்கு தோல்வி - வீடியோ

    வேலூர்: வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளில் இடைத்தேர்தலை காட்டியும் தற்போது அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

    வேலூர் மக்களவைத் தொகுதியானது வேலூர், அணைக்கட்டு, கீழ்வழித்துணையான்குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை கொண்டது. ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் ஆரம்பத்திலிருந்து அதிமுகவின் ஏசி சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். பின்னர் மதியம் 1 மணிக்கு இந்த நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டது.

    வாக்கு வித்தியாசம்

    வாக்கு வித்தியாசம்

    கதிர் ஆனந்த் முன்னிலை வகித்துக் கொண்டிருந்தார். இறுதி வரை இதே நிலைதான் நீடித்தது. இதையடுத்து 10 லட்சம் வாக்குகளும் எண்ணப்பட்டு கதிர்ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    டஃப் கொடுத்த சண்முகம்

    டஃப் கொடுத்த சண்முகம்

    இது என்ன வெற்றி என திமுக கொண்டாடினாலும் நூலிழையில் கதிர் ஆனந்த் தப்பினார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு ஏசி சண்முகம் டஃப் பைட் கொடுத்தார். இதில் திமுகவுக்கு அதிர்ச்சியான சம்பவம் என்னவென்றால் இடைத்தேர்தல்களை விட அதிமுகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.

    எத்தனை வாக்குகள்

    எத்தனை வாக்குகள்

    இந்த மக்களவை தேர்தலில் வேலூர் சட்டசபை தொகுதியில் திமுகவுக்கு 78, 091, அதிமுகவுக்கு 72,626 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. அது போல் அணைக்கட்டு தொகுதியில் அதிமுகவுக்கு 88, 770 வாக்குகளும் திமுகவுக்கு 79,231 வாக்குகளும் கிடைத்தன. கேவி குப்பம் தொகுதியில் அதிமுகவுக்கு 80,100 வாக்குகளும் திமுகவுக்கு 71,991 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

    ஆம்பூர் தொகுதி

    ஆம்பூர் தொகுதி

    வாணியம்பாடி தொகுதியில் திமுகவுக்கு 92, 599 வாக்குகளும், அதிமுகவுக்கு 70,248 வாக்குகளும் ஆம்பூர் தொகுதியில் திமுகவுக்கு 79,371 வாக்குகளும், அதிமுகவுக்கு 70,768 வாக்குகளும் கிடைத்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த இடைத்தேர்தலில் திமுக 96,455 வாக்குகளும், அதிமுக 58, 688 வாக்குகளையும் பெற்றது. ஆனால் இந்த எம்பி தேர்தலில் அதிமுகவுக்கு 12, 080 வாக்குகள் கூடுதலாக கிடைத்தது.

    கணிசமான வாக்குகள்

    கணிசமான வாக்குகள்

    அது போல் குடியாத்தம் இடைத்தேர்தலில் திமுக 1,05,316 வாக்குகள் பெற்றது. ஆனால் தற்போது வெறும் 82,887 வாக்குகளே பெற்றுள்ளது. ஆனால் அதிமுகவோ கடந்த இடைத்தேர்தலை காட்டிலும் 4 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. எனவே ஆம்பூர், குடியாத்தத்தில் திமுகவுக்கு வாக்குகள் சரிந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    English summary
    ADMK gets more votes than Byelection which was conducted in Gudiyatham and Ambur last May.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X