வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல் நாளே.. காலையிலேயே.. சிரித்த முகத்துடன் வந்த ஏசி சண்முகம்.. வேலூரில் வேட்பு மனுதாக்கல்

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.வேட்பு மனு தாக்கல் செய்த வரும் 18ம் தேதி கடைசி நாளாகும். 19ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடக்க உள்ளது. 22ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

aiadmk alliance puthiya neethi katchi leader A C Shanmugam filled Nomination in Vellore lok sabha

வேலூர் தொகுதியில் ஆளும் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் ஏசி சண்முகம் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்ய வேலூர் ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவருடன் அமைசசர்கள் கேசி வீரமணி, தங்கமணி, சேவூர் ராமசந்திரன் வந்தனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக மூத்த நிர்வாகிகளும் உடன் வந்தனர்.

ஏ.சி. சண்முகம் தனது வேட்பு மனுவை நிரப்பி, மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் கி வீரமணி உடன் இருந்தார். இந்நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நாளை வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.

குழந்தையின் நலனுக்காக... மீண்டும் சேர போகிறோம்.. டிக்டாக்கால் பிரிந்த தம்பதி அறிவிப்பு குழந்தையின் நலனுக்காக... மீண்டும் சேர போகிறோம்.. டிக்டாக்கால் பிரிந்த தம்பதி அறிவிப்பு

இன்று ஏசி சண்முகம் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த காரணத்தால் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். நாளை திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்வதால் நாளையும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Today first day for filling nomination at Vellore lok sabha,aiadmk alliance puthiya neethi katchi leader A C Shanmugam Nomination filed today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X