வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் திமுகவுல இருக்கேன்.. எங்க வேணும்னாலும் போய்க்கோ.. உதார் விட்ட சுதாகர்.. தர்ணாவில் குதித்த தேவி

திமுக பிரமுகரை கைது செய்ய செய்ய கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்

Google Oneindia Tamil News

வேலூர்: "போடி.. நீ எங்கே வேணாலும் போய் கம்ப்ளைன்ட் பண்ணு.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்.. என்னை எதுவும் பண்ண முடியாது" என்று காதலி தேவியிடம் வேலூர் திமுக பிரமுகர் சுதாகர் கறாராக சொல்லி விட்டார்.. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேவி இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை தந்துள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் சுதாகர்.. இவர் வேலூர் மேற்கு மாவட்ட திமுகவில் இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.. இவர் தேவி என்ற பெண்ணை காதலித்தார்.. தேவிக்கு 33 வயசாகிறது... கடந்த 15 வருஷமாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர்.

ambur woman protest against vellore dmk cadre

சென்னை போரூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் தேவி நர்ஸாக வேலை பார்க்கிறார்.. 15 வருஷமாக உருகி உருகி லவ் பண்ணிவிட்டு, காலமும் தாழ்த்திவிட்டு, இப்போது வந்து கல்யாணத்தில் இஷ்டமில்லை என்று தேவியிடம் சொல்லி உள்ளதாக தெரிகிறது.. மேலும் தேவியிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியும் உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி, வேலூர் எஸ்பி ஆபீசிலும், வேப்பங்குப்பம் ஸ்டேஷனிலும் புகார் தந்துள்ளார்.. அந்த மனு மீது விசாரணையும் நடந்து வந்தது.. இதை பற்றி தேவி சொல்லும்போது: "நானும் சுதாகரும் சின்ன வயசில இருந்தே லவ் பண்றோம்.. அவருக்காகத்தான் இத்தனை வருஷம் கல்யாணம் பண்ணாம காத்துக்கிட்டு இருக்கேன்.. ஆனா இப்போ திடீர்னு சொந்தக்கார பொண்ணுகூட கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க. இந்த விஷயம் கேள்விப்பட்டு, சுதாகர்கிட்ட நியாயம் கேட்டேன்.

ஆனா என்னை அவர் அடிச்சிட்டார்.. "போடி.. நீ எங்கே வேணாலும் போய் கம்ப்ளைன்ட் பண்ணு.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்.. என்னை எதுவும் பண்ண முடியாது" என்னு சொன்னார்.. அதனால நான் ஊர் பஞ்சாயத்துல போய் சொன்னேன்.. திருப்பத்தூர்ல மாவட்ட திமுக நிர்வாகிகள் கிட்டயும் புகார் சொன்னேன்.. அவங்களும் பேசினாங்க.. ஆனால் சுதாகர் யார் சொன்னதையும் காதில் வாங்கிக்கல.. இப்போ போலீசில் புகார் தந்திருக்கேன்" என்றார்.

ambur woman protest against vellore dmk cadre

ஆனால், தேவியின் புகாரை சுதாகர் மறுத்திருந்தார்.. மேலும் சட்டப்பூர்வமாக இதை அணுக போவதாகவும் கூறியிருந்தார்.. இந்நிலையில் எங்கு புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காததால், தேவி இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்... வேப்பம்பட்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு தன்னந்தனியாக உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை தந்துவிட்டது.

15 வருஷமாக கல்யாணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிவிட்டு, இப்போது தலைமறைவாக உள்ள சுதாகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தேவி அப்போது முழக்கமிட்டார்.. இதையடுத்து பெண் போலீசார் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

English summary
ambur woman protest against vellore dmk cadre
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X