வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவசிய தேவை இருந்தால் மட்டுமே இ பாஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் - தமிழக முதல்வர்

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இ-பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும் தேவையின்றி வெளியே செல்லாதீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

வேலூர்: பொதுமக்கள் நலன் கருதியே இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.
முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

Recommended Video

    August 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass- முதல்வர் அதிரடி | OneindiaTamil

    வேலூரில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றிய ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    Apply for e-pass only if necessary - CM Edapadi Palanisamy

    அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே இ பாஸ் பெற்று வெளியே செல்ல வேண்டும்; தேவையின்றி வெளியே செல்லாதீர்கள் என்றார். கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. காய்ச்சல் முகாம்கள் காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

    மக்களே.. எல்லாரும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கங்க... ஏன் தெரியுமா? WHO முக்கிய வார்னிங்மக்களே.. எல்லாரும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கங்க... ஏன் தெரியுமா? WHO முக்கிய வார்னிங்

    முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழகம்தான். குடிமராமத்து பணிகள் காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளன.
    தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

    English summary
    The e-pass practice has been relaxed in the public interest. Chief Minister Edappadi Palanichamy has advised the public to apply for e-pass only for essential needs.Chief Minister Palaniachai also said that the elderly, pregnant women and children should be alert and safe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X