வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விபச்சாரம் செய்ய மாட்டியா? 16 வயசு பெண்ணை நடுரோட்டில் அடி உதைத்த பெண்

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுமியை தாக்கியதற்காக போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வங்கதேச பெண்-

    வேலூர்: நடுரோட்டிலேயே விரட்டி விரட்டி அந்த சிறுமியை அப்படி போட்டு அடித்தார் அந்த 30 வயது பெண். ஏதோ அம்மா-பெண் பிரச்சனை என்று எல்லாருமே நினைத்தார்கள். ஆனால் விஷயமே வேறு!!

    வங்காளதேசத்தை சேர்ந்தவர் முஸ்கானா. 30 வயதான இவருக்கு 16 வயது சிறுமியின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அந்த பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கொண்ட முஸ்கானா வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி வேலூருக்கு கூட்டி வந்திருக்கிறார்.

    லாட்ஜில் சிறுமி

    லாட்ஜில் சிறுமி

    எப்படியோ வேலை கிடைத்து விடப்போகிறது, நிறைய சம்பாதிக்க போகிறோம், குடும்பத்தையே இனி காப்பாத்தி விடலாம் என்று அந்த சிறுமியும் ஆயிரம் கனவுகளுடன் அந்த பெண்ணுடன் வேலூர் வந்தார். பிறகு ஆற்காடு ரோட்டில் இருந்த ஒரு லாட்ஜில் அந்தபெண்ணை தங்க வைத்தார் முஸ்கானா. அப்போதுவரை அந்த சிறுமிக்கு எதுவுமே தெரியவில்லை.

    தப்பி ஓடினார்

    தப்பி ஓடினார்

    கொஞ்ச நேரத்திலேயே அந்த ரூமுக்கு ஒரு வாலிபரை அழைத்து வந்தார் முஸ்கானா. சிறுமியை விபச்சாரத்தில் தள்ள வைக்கும் வேலையில் இறங்கினார் முஸ்கானா. இதனால் சிறுமிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. மாட்டவே மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். முஸ்கானா கட்டாயப்படுத்த கட்டாயப்படுத்தவே இறுதி வரை மறுத்த சிறுமி, 2 தினங்களுக்கு முன்பு அந்த லாட்ஜில் இருந்து தப்பி கிருஷ்ணா தியேட்டர் அருகே ஓடினார்.

    துரத்திய முஸ்கானா

    துரத்திய முஸ்கானா

    பின்னாலேயே முஸ்கானாவும் துரத்தி கொண்டு ஓடினார். நடுரோட்டிலேயே சிறுமியை இழுத்து பிடித்து சரமாரியாக அடிக்க தொடங்கினார். விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியவாறே தாக்கினார். இவ்வளவும் நடுரோட்டில் நடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள், ஏதோ அம்மா, பெண்ணின் வீட்டு தகராறு என்றுதான் நினைத்தார்கள்.

    பாஸ்போர்ட் இல்லை

    பாஸ்போர்ட் இல்லை

    ஆனால் மெதுவாகதான் விஷயம் வெளிப்பட்டது. உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர். உடனடியா விரைந்து சென்ற அவர்களும் சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து முஸ்கானாவிடம் விசாரணை நடத்தினர். இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முஸ்கானாவை போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். பிறகு விசாரணை நடத்தியதில் அவருக்கு பாஸ்போர்ட்டே இல்லை என்று தெரியவந்துள்ளது.

    கள்ளதோணி

    கள்ளதோணி

    சிறுமியை கள்ளத் தோணிமூலமே வங்கதேசத்தில் இருந்து பெங்களூர், ஆந்திராவின் சித்தூர் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, பெண் குழந்தைகள் வேறு யாரையாவது முஸ்கானா இப்படி சீரழித்துள்ளாரா என்பது குறித்தும், சிறுமியின் உறவினர்கள் யார் என்பதை விசாரித்து அவர்களிடம் பத்திரமாக ஒப்படைப்பதும் குறித்தும் போலீசார் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    bangladeshi woman arrested in Bosco for girl attack in Vellore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X