வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய அமைப்பினரை ஏன் கைது செய்யவில்லை.. கேட்கிறார் பாஜக இப்ராஹிம்

வேலூர் இப்ராஹிம் கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்

Google Oneindia Tamil News

சென்னை: "பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றுவது எல்லாம் சின்ன சின்ன குற்றங்கள்... இதுக்கெல்லாம் 19 வயது இளைஞரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய அமைப்பினரை ஏன் கைது செய்யவில்லை" என்று வேலூர் இப்ராஹிம் கேள்வி எழுப்பி உள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஏகத்துவ பிரசார ஜமாத் என்கிற அமைப்பை நிறுவி நடத்தி வருபவர் வேலூர் இப்ராஹிம்... இது பாஜகவுக்கு ஆதரவான அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் இப்ராஹிம்.. அதனால் வேலூர் இப்ராஹிம்க்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன இஸ்லாமிய அமைப்புகள்.

 BJP Ibrahim says saffronised Periyar statues is not a crime

இந்நிலையில், ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் என்று பேசிய இஸ்லாமிய அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார்.. அதன்படி இந்த நடைபயணம் சென்னை மெரினா பீச்சில் உள்ள காந்தி சிலையிலிருந்து துவங்கியது..

இதில் இப்ராஹிம் தலைமையில் பலர் கலந்து கொண்டு, தலைமை செயலகம் நோக்கி நடைபயணத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இப்ராஹிம் சொன்னதாவது: "ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம், ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை தற்கொலை படையாக மாறி தகர்ப்போம் என்று போலீசாரையும் நீதித்துறையையும் இழிவாக பேசிய இஸ்லாமிய அமைப்பினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

 வேண்டா வெறுப்பு.. முதல் நாளே பாஜக கொடுத்த ஷாக்.. அழையா வீட்டுக்கு விருந்தாளியாக போன குஷ்பு? வேண்டா வெறுப்பு.. முதல் நாளே பாஜக கொடுத்த ஷாக்.. அழையா வீட்டுக்கு விருந்தாளியாக போன குஷ்பு?

பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றுவது போன்ற சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபட்ட 19 வயது...
இளைஞரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இஸ்லாமிய அமைப்பினரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
Vellore Ibrahims says about Periyar Statue issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X