வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"குண்டு ஒன்னு வச்சிருக்கேன்.. வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன்".. அலறிய ஆம்பூர்!

ஆம்பூருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பானது

Google Oneindia Tamil News

Recommended Video

    வெடிகுண்டு மிரட்டலால் பதறிய ஆம்பூர் -வீடியோ

    ஆம்பூர்: "குண்டு ஒன்னு வச்சிருக்கேன். ஆம்பூருக்கு வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன்" என்று ஒரு மிரட்டல் வரவும் ஒட்டுமொத்த ஆம்பூரும் அலறிவிட்டது!

    காஷ்மீர் பிரச்சினை விவகாரத்தினால் நாடே உஷ்ணமாகி கிடக்கிறது. இன்னும் நான்கு நாளில் சுதந்திர தினம் வர உள்ளதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்திலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Bomb threat to Ambur city and security further tightened

    அதனால் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் எந்நேரமும் பாதுகாப்பிலேயே விழிப்புடன் இருந்து வருகிறார்கள். அதேபோல, சமூக வலைதளங்களிலும் போலீசார் ஒரு கண் வைத்துதான் வருகிறார்கள்.

    அந்த வகையில், நேற்று மாலை கிருஷ்ணகுமார் என்ற ஃபேஸ்புக்கில் ஒரு மிரட்டல் போட்டோ வெளியாகி இருந்தது, அதில், "குண்டு ஒன்னு வச்சிருக்கேன். ஆம்பூருக்கு வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன் என கூறப்பட்டிருந்தது. இந்த பதிவு, இணையத்திலும் வேகமாக பரவியது.

    இதனால் அதிர்ந்த போலீசார், ஆம்பூர் நகரம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தினர், இன்று காலை ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. மோப்ப நாயை கொண்டு,வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடத்ததப்பட்டது. ஆம்பூர் நகரமே இந்த சோதனையால் பரபரப்பானது.

    இறுதியில், இது ஒரு புரளி என்றும், பதிவிடப்பட்டிருந்த அந்த முகநூல் பக்கம் போலியானது என்றும் தெரியவந்துள்ளது. வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்த முயன்ற நபர் யார் என்று சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது.

    English summary
    Bomb threat to Ambur and the bomb test were conducted in major places
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X