வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏன் வந்து மோதுனே" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி

பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் பலியானார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சாலையில் சண்டை.. பஸ்சை விட்டு இறங்கிய பயணிகள்.. மின்னல் வேகத்தில் மோதிய ஆம்னி.. 4 பேர் பலி! - வீடியோ

    வேலூர்: "ஏன் வண்டி மேல நீ மோதுனே.. நான் கிடையாது நீதான் வந்து மோதுனே.. நீ எடு வண்டியை" என்று 2 வாகனங்களில் வந்தவர்களும் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. 3-வதாக ஒரு வாகனம் வந்து மோதியதில்.. புதுமாப்பிள்ளை இறந்துவிட்டார்.

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் அய்யா.. 54 வயதாகும் இவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது 24 வயது மகன் ராஜன் விண்ணரசு.. கல்வி நிறுவனங்களில் தந்தை உதவியாக இருந்து வந்தவர்.

    car and bus accident 4 died near ullundurpet

    கடந்த திங்கட்கிழமை தூத்துக்குடியில் ராஜனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால் குடும்பத்துடன் உறவினர்கள் சென்றிருந்தனர்.. நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, 2 கார்களில் சொந்த ஊருக்கு கிளம்பினர்.

    விடிகாலை நேரம் 3 மணி இருக்கும்.. உளுந்தூர்பேட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அறந்தாங்கியில் இருந்து சென்னை நோக்கி ஒரு அரசு பஸ், அந்த காரினை லேசாக உரசியபடி சென்றது. இதனால் பதறி போன ஐசக் அய்யா குடும்பத்தினர் காரில் இருந்து இறங்கி, பஸ் டிரைவருடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்..

    பஸ் டிரைவரும் தொடர்ந்து ஐசக்குடன் வாக்குவாதம் செய்தார்.. "ஏன் வந்து என் காரில் இடிச்சே.." என்று கேட்க, நான் இல்லை.. நீதான் பஸ்ஸை நெருக்கி காரை ஓட்டி வந்தே என்று டிரைவரும் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பஸ்ஸுக்கும் காருக்கும் நடுவில் நின்றுகொண்டு இந்த தகராறு செய்து கொண்டிருந்தனர்.. ஆந்த சமயத்தில் பின்னாடியே வேகமாக வந்த பிரைவேட் பஸ், அரசு பேருந்தின் மீது மோதியது. இதில், புது மாப்பிள்ளை ராஜன் உட்பட பஸ்ஸில் பயணம் செய்த வெள்ளைச்சாமி, அருண் பாண்டியன், சற்குணம் உள்ளிட்ட 4 பேருமே சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. டிரைவர்கள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்..

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 பேரின் உடல்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக டிராபிக் ஜாம் ஏற்பட்டது.

    English summary
    private bus collision on gov bus near ulundurpet and 4 people died on the spot
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X