வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துணி தைத்து சேர்த்த ரூ. 1000.. கஜா புயல் நிவாரணத்திற்கு அளித்தார் நளினி

புயல் நிவாரண நிதியாக நளினி ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

Google Oneindia Tamil News

வேலூர்: சிறையில் இருக்கும் நளினி புயல் நிவாரணத்துக்கு உதவி செய்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி நபர்கள் முதல் பெரிய, சிறிய அமைப்புகள், நிறுவனங்கள் என உதவி வருகின்றன. பிச்சைக்காரர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை நிதி கொடுத்து வருகிறார்கள்.

இப்போது வேலூர் சிறையிலுள்ள நளினியும் உதவி உள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 28 வருஷத்துக்கும் மேலாக நளினி சிறையில் உள்ளார்.

ஒரு மூட்ட நெல் இருக்கு.. உதவாம இங்கெதுக்கு #gaja ஒரு மூட்ட நெல் இருக்கு.. உதவாம இங்கெதுக்கு #gaja

ஆயிரம் ரூபாய்

ஆயிரம் ரூபாய்

இந்த நிலையில், டெல்டாவாசிகளுக்கு நளினி ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சிறையில் சம்பாதித்த இந்த பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக சொல்லி சிறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.

டெய்லரிங் வேலை

டெய்லரிங் வேலை

நளினி இந்த பணத்தை சிறையில் டெய்லரிங் வேலை பார்த்து சம்பாதித்தது ஆகும். சிறைக் கைதிகளுக்கு சீருடை தைத்து தரும் வேலை. இதற்காக அவருக்கு கூலியும் வழங்கப்படும்.

சிறைத்துறை அதிகாரிகள்

சிறைத்துறை அதிகாரிகள்

இதைத்தான் வெள்ள நிவாரணமாக கொடுத்துள்ளார். நளினியின் பணத்தை பெற்றுக் கொண்ட சிறைத்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளதாக கூறினர்.

மதிப்பானது

மதிப்பானது

விடுதலை பற்றிய பேச்சே எழாத நிலையில், சிறையில் டெய்லரிங் வேலைபார்த்து நளினி கொடுத்துள்ள ஆயிரம் ரூபாய் மதிப்பு மிக்கதாகவே பார்க்கப்படுகிறது.

English summary
Rajiv Gandhi murder convict Nalini gives 1000 rupees for Cyclone Gaja victims,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X