வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்ல மட்டன் தர சொல்லுங்க.. என்னால முடியல.. கொரோனா வார்டிலிருந்தபடி.. அமைச்சரிடம் அடம் பிடித்த நபர்

அமைச்சர் வீரமணியிடம் கொரோனா வார்டில் இருந்தவர் மட்டன் கேட்டு அடம் பிடித்தார்

Google Oneindia Tamil News

வேலூர்: சலாக் அலேக்கும், எப்படி இருக்கீங்க என்றுதான் அமைச்சர் வீரமணி கேட்டார்.. அதற்குள் "என்னால கறி இல்லாம இருக்க முடியல.. மட்டன் தர சொல்லுங்க" என்று கொரோனா வார்டில் இருந்த நபர் ஒருவர் வீரமணியிடம் வீடியோ காலில் அடம்பிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவைரஸ் பரவல் தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது.. கிட்டத்தட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வைரஸ் தொற்று கவ்விக் கொண்டுள்ளது. வட மாவட்டங்களும் அடக்கம்!

 coronavirus: corona victim asking for mutton to minister veeramani

திருப்பத்தூர், ராணிப்பேட்டை வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களிடம் அமைச்சர் கேசி வீரமணி வீடியோ கால் மூலம் பேசினார்.. அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.. அதில் ஒருவரிடம் பேசும்போது அமைச்சரை ரொம்பவே திணறடித்து விட்டார்.

பொதுவாக இந்த பகுதியில் முஸ்லீம்கள் அதிகம்.. இவர்கள் நான்-வெஜ் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.. பிரியாணி பிரியர்களும்கூட.. அப்படி ஒரு பிரியர்தான் கொரோனா வார்டில் சிக்கி கொண்டுள்ளார்.. இவர் இப்போது டெஸ்ட்டில் உள்ளதால் டாக்டர்கள் சொல்லும் சாப்பாடுதான் சாப்பிட முடியும்.. அதனால் கறி சாப்பாடு கட்!!

சாப்பிட கறி இல்லாமல் நொந்து போய் இருந்தவரிடம்தான் நல்லா இருக்கீங்களா? என்று வீரமணி வீடியோ காலில் விசாரித்தார்.. "சலாம் அலேக்கும்" என்று ஆரம்பித்து உருதுவில் பேசி கடைசியில் தமிழிலும் அந்நபரிடம் நலன் விசாரித்தார் அமைச்சர்.

கறி சாப்பாடு இல்லாமல் இருக்க முடியவில்லை என்று ஒரு கட்டத்தில் அந்நபர் அடம்பிடிக்க ஆரம்பித்தார்.. அவரை வீரமணி சமாதானப்படுத்தினார்.. "நீங்க 12 நாட்களுக்கு நான்-வெஜ் சாப்பிடக்கூடாது.. அப்படி சாப்பிட்டால், இப்போ டாக்டர்கள் தரும் மருந்து வேலை செய்யாது.. அதனால கொஞ்சம் பொறுத்துக்குங்க.. உங்களுக்கு இப்போ உடம்பு நல்லா இருக்கு.

Recommended Video

    சரக்கு கேட்டு கிணற்றில் குதித்து விடிய விடிய ரகளை செய்த குடிமகன்

    நீங்க எல்லாருமே நல்லாதான் இருக்கீங்கன்னு டாக்டர் சொல்லி இருக்கார்.. சீக்கிரமாகவே டிஸ்சார்ஜ் ஆயிடுவீங்க... எனக்கு உங்களை எல்லாம் வந்து பார்க்கணும்னு ஆசைதான்.. ஆனா நேரில் வந்து பார்க்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுவீங்க.. அதுவரைக்கும் ஆஸ்பத்திரியில் சொல்லும் சாப்பாட்டை சாப்பிடுங்க" என்றார்.

    English summary
    coronavirus: corona victim asking for mutton to minister veeramani
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X