வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென குவிந்த வாக்காளர்கள்.. கட்டுப்படுத்த திணறிய போலீஸ்.. கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு

Google Oneindia Tamil News

Recommended Video

    lok sabha election: வாக்காளர்களை கட்டுப்படுத்த கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு

    அரக்கோணம்: அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ஆற்காடு அருகே கீழ்விஷாரத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் வாக்காளர்களைக் கலைக்க திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்றத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அனைத்துத் தொகுதிகளிலும் பெரிய அளவில் அசம்பாவிதம் இல்லாமல் வாக்குப் பதிவு முடிந்தது. ஆனால், அரக்கோணம் தொகுதிக்குள்பட்ட ஆற்காடு அருகே கீழ்விஷாரத்தில் வாக்குப் பதிவு முடியப் போகும்போது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது.

     CRPF did firing on air to disperse the crowd in Arakkonam polling station

    லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி! லோக்சபா தேர்தலில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் பலி.. சேலம், ஈரோட்டில் அதிர்ச்சி!

    அங்குள்ள ராசாத்திபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு முடியப் போகும் நிலையில் திடீரென ஆயிரக்கணக்கானோர் கூடினர். வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது, கலைந்து செல்லுங்கள் போலீஸார் கூறினர். ஆனால் பொதுமக்கள் கலையாமல் வரிசையில் முண்டியடித்து கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து மக்கள் கூட்டம் சிதறி ஓடியது. அந்தப் பகுதியே பெரும் போர்க்களமாக காணப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரம் சீல் வைக்கும் போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என்பதால் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

    இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    CRPF police fires in air to disperse the crowqd gathered in KilVisharam polling station even after polling ends.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X