வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. வெறும் 3 மாசத்தில்.. ஏடாகூடமாக உயர்ந்த புதிய நீதிக் கட்சி ஏசிஎஸ்-ஸின் சொத்து!

Google Oneindia Tamil News

Recommended Video

    Vellore Constitution : குஷியில் 'ஏசி சண்முகம்! தீவிரத்தில் கதிரானந்த்: வேலூர் தொகுதி நிலவரம்- வீடியோ

    வேலூர்: கதிர் ஆனந்த்தை விடுங்க.. தொழிலதிபர் ஏசி சண்முகத்துக்கு எவ்வளவு சொத்து இருக்கு தெரியுமா.. கிட்டத்தட்ட 194 கோடிக்கு சொத்து இருக்கிறதாம்!

    வேலூரில் 5-ம் தேதி எம்பி தேர்தல் நடக்க உள்ளது. இதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும் திமுக சார்பில் கதிர் ஆனந்த்தும் போட்டியிடுகின்றனர்.

    கடந்த முறை கதிர் ஆனந்த் வீடு, நிறுவனங்களில் சோதனை நடந்தது. "தோண்ட தோண்ட" பணம் என்ற வாசகம் வைரலானது. அப்போது ஏசி சண்முகமும் தொழிலதிபர்தானே.. கல்வியாளர் தானே.. அங்கேயும் ரெய்டு நடத்த வேண்டியதுதானே என்று ஒருசில திமுக பிரமுகர்கள் பொருமினார்கள்.

    இங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம் இங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்

    தாக்கல்

    தாக்கல்

    இந்நிலையில், எவ்வளவு சொத்துக்களை வைத்திருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது. வேட்பாளர் என்பதால், சொத்து மதிப்பினை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. அதன்படி ஏசி சண்முகம், தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பில், தன் பெயர் மற்றும் தன்னுடைய மனைவி லலிதா லட்சுமி பெயரில் மொத்தம் ரூ.193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அசையா சொத்து

    அசையா சொத்து

    கையிருப்பு ரொக்கம் ரூ. 8,92,470, வங்கியிருப்பு ரூ. 79,19,627.63 என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் உள்ளன. மேலும் விவசாய நிலங்கள் இனங்களில் ஏ.சி.சண்முகம் பெயரில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் ரூ. 39 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரத்து 600 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ. 26 கோடியே 56 லட்சத்து 30 ஆயிரத்து 138 மதிப்பிலும் அசையா சொத்துகள் உள்ளது.

    கடன்

    கடன்

    ஆனால், ரூ. 12 கோடியே 76 லட்சத்து 61ஆயிரத்து 948 மதிப்பில் ஏசி சண்முகத்துக்கும், ரூ.11 கோடியே 91 லட்சம் மதிப்பில் அவரது மனைவிக்கும் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஹைலைட்

    ஹைலைட்

    இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், கடந்த ஏப்ரல் மாசம் இப்படித்தான் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, தனது குடும்ப சொத்து மதிப்பாக மொத்தம் ரூ. 191 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரத்து 579.27 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

    உயர்வு?

    உயர்வு?

    ஆனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டு இப்போது மீண்டும் நடக்க உள்ள நிலையில், தனது குடும்பச் சொத்து மதிப்பாக ரூ. 193 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரத்து 347.85 என குறிப்பிட்டுள்ளார். அதாவது, இந்த 3 மாசத்தில் மட்டும் அவரது குடும்ப சொத்து ரூ. 2.74 கோடி உயர்ந்திருக்கிறது!

    English summary
    AIADMK Candidate AC Shanmugams asset value affidavit given election commission
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X