வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆம்பூரில் சர்ச்சை.. திமுக எம்எல்ஏ செருப்பை.. கையில் தூக்கி கொண்டு போன ஊராட்சி செயலாளர்.. பரபர வீடியோ

ஆம்பூர் எம்எல்ஏவின் செருப்பை தூக்கி சென்றுள்ளார் ஊராட்சி செயலாளர்

Google Oneindia Tamil News

வேலூர்: திரும்பவும் ஒரு செருப்பு விவகாரம் வெடித்துள்ளது.. ஆம்பூர் எம்எல்ஏவின் செருப்பை ஊராட்சி செயலாளர் கையில் எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

    திமுக எம்எல்ஏ செருப்பை கையில் தூக்கி கொண்டு போன ஊராட்சி செயலாளர்.. பரபர வீடியோ

    சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஊட்டி சென்றிருந்தார்.. அப்போது பழங்குடி சிறுவனை செருப்பை துடைக்கும்படி சொன்ன விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

     dmk ambur: panchayat secretary carries ambur dmk mlas slipper

    இது உள்நோக்கத்துடன், வேண்டுமென்றே அமைச்சர் இந்த காரியத்தை செய்யவில்லை என்றாலும், யாராலும் இதை ஏற்க முடியவில்லை.. வழக்கம்போல வெள்ளந்தியாக இப்படி அவர் சொல்லிவிட்டாலும், சம்பந்தப்பட்ட சிறுவனை அழைத்து, கலெக்டர் முன்னிலையிலேயே வருத்தமும் சொன்னார்.

    இருந்தாலும் அமைச்சர் அப்படி செய்திருக்க கூடாது என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.. அதுபோலவே இப்போது திமுகவில் ஒரு எம்எல்ஏ செய்திருக்கிறார்.. கடந்த 1-ந் தேதி பெய்த கனமழையால் ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள பொன்னப்பள்ளி ஏரிக்கரையை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் பார்வையிட வந்துள்ளார்.

    அவருடன் வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர், உட்பட ஏராளமானோர் சென்றுள்ளனர்.. அது ஏரிக்கரை பகுதி என்பதால், சேறும் சகதியுமாக அந்த பகுதி உள்ளது.. அதனால் எம்எல்ஏவால் வேகமாக அங்கு நடக்க முடியவில்லை போலும்.. அவருடைய செருப்பு ஊராட்சி செயலாளர் கையில் இருந்தது.. செருப்பை இவர் பின்னாடியே கையில் எடுத்துக்கொண்டு போக, முன்னாடியே எம்எல்ஏ செல்கிறார்.. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    தலைமுடியை இழுத்து.. வயிற்றில் உதைத்தார்.. இன்ஸ்பெக்டர் மீது.. தூத்துக்குடி டீச்சர் பகீர் புகார் தலைமுடியை இழுத்து.. வயிற்றில் உதைத்தார்.. இன்ஸ்பெக்டர் மீது.. தூத்துக்குடி டீச்சர் பகீர் புகார்

    இதுவும் எதேச்சையாக நடந்தது என்றே நம்புவோம்.. ஆனால் நடந்ததை ஏற்க முடியாது.. செருப்பை எம்எல்ஏவே கையில் கொண்டு போயிருக்கலாம்.. அல்லது ஊராட்சி செயலாளரே கையில் கொண்டு வர முன்வந்தாலும், அதை வேண்டாமென்று சொல்லி தடுத்திருக்கலாம்.. தனிநபர் விவகாரத்தில், யாரையுமே மட்டமாக நடத்த யாருக்குமே உரிமை இல்லை.. அது அதிமுகவா இருந்தாலும் சரி, திமுவாக இருந்தாலும் சரி!

    English summary
    dmk ambur: panchayat secretary carries ambur dmk mlas slipper
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X