வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொடர்ந்து ரெய்டில் சிக்கும் கதிர் ஆனந்த்.. மூட்டை மூட்டையாக மாட்டிய பணம்?.. சிக்கலில் துரைமுருகன்?

தொடர்ந்து, அடுத்தடுத்து நடக்கும் ரெய்டுகள் காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் கடும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர் அருகே தனியார் சிமெண்ட் குடோனில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்- வீடியோ

    வேலூர்: தொடர்ந்து, அடுத்தடுத்து நடக்கும் ரெய்டுகள் காரணமாக திமுக பொருளாளர் துரைமுருகன் கடும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

    திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் மீண்டும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இது வேலூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஒரே வாரத்தில் இரண்டாவதாக நடக்கும் ஐடி ரெய்டு ஆகும் இது. நேற்று முதல்நாள் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது. தேர்தல் பறக்கும்படை பிரிவினர் இந்த சோதனையை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் அருகே ஷாக்.. வார்டு பெயர் எழுதப்பட்ட மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம்.. சிக்கும் பிரபலம் யார்? வேலூர் அருகே ஷாக்.. வார்டு பெயர் எழுதப்பட்ட மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம்.. சிக்கும் பிரபலம் யார்?

    பணம்

    பணம்

    இந்த நிலையில்தான் வேலூரில் காட்பாடி அருகே உள்ள சிமெண்ட் குடோன் ஒன்றில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இதில் சுமார் 9 கோடி ரூபாய்க்கு பணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது அத்தனையும் 200 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    யார் பணம்

    யார் பணம்

    ஆனால் இது யாருடைய பணம் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்த சிமெண்ட் குடோன் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இது அவருக்கு சொந்தமான பணமா இல்லை பூஞ்சோலை சீனிவாசனின் பணமா என்பது குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை.

    பெரிய பரபரப்பு

    பெரிய பரபரப்பு

    இதனால்தான் தற்போது வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையில் குதித்து இருக்கிறார்கள். இதனால்தான் தற்போது கதிர் ஆனந்திற்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் சோதனைகள் நடந்து வருகிறது. இந்த சிமெண்ட் குடோன் குறித்து கதிர் ஆனந்திடம் விசாரணை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    சிக்கல்

    சிக்கல்

    இது துரைமுருகன் தரப்பிற்கு பெரிய சிக்கலையும், அதிர்ச்சியையும் தந்து உள்ளது. இந்த சோதனை தொடர்ந்து, அதிகமாக பணம் வேலூரில் கைப்பற்றப்படும்பட்சத்தில் இங்கு தேர்தலை தள்ளி வைக்க கூட வாய்ப்பு இருக்கிறது. இன்னும் எவ்வளவு நேரம் இந்த ரெய்டு நீடிக்கும், துரைமுருகன் எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

    English summary
    What will happen next? DMK Duraimurugan may land in trouble due to series of Income Tax raid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X