தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
வேலூர்: உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

அவர் ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். அண்மையில் மட்டும் அவர் உடல்நலக்குறைவு காரணமாக இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் துரைமுருகன் இன்று மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது அவரது ஆதரவாளர்களிடையேயும், தி.மு.க. தொண்டர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான துரைமுருகன் மருத்துவமனையில் அடிக்கடி அனுமதிக்கப்படுவது தி.மு.க வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 7 மணி நேர தொடர் சிகிச்சைக்கு பிறகு துரைமுருகன் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.