வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹிட்லர் யூதர்களை அழித்தார்.. இவங்க.. இஸ்லாமியர்களை குறி வைக்கிறாங்க.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு

சிஏஏவுக்கு எதிராக துரைமுருகன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹிட்லர் யூதர்களை அழித்தார்.. இவங்க.. இஸ்லாமியர்களை குறி வைக்கிறாங்க.. துரைமுருகன் பரபரப்பு பேச்சு - வீடியோ

    வேலூர்: "ஹிட்லர் யூதர்களை அழித்தார். இவங்க இஸ்லாமியர்களை குறி வெக்கிறாங்க.. ஹிட்லருக்கும், இவங்களுக்கும் என்ன வித்தியாசம்? இப்போ ஒரு இனத்தையே அழிக்க பார்க்கிறாங்க" என்று திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.

    நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்து வருகின்றன.. இவை இரண்டுமே இன்றுவரை பேசுபொருளாக தேசத்தில் உருவெடுத்து வருகின்றன.

    மாணவர்கள் முதல் மாநில கட்சிகள் வரை தங்களது எதிர்ப்புகளை பேரணி, ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில், மனித நேய மக்கள் கட்சி மாநாடு நடத்தி, இதற்கான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

     தந்தை பெரியார் குறித்து அவதூறு: ஜன.22, 23-ல் ரஜினிகாந்த் வீடு முற்றுகை- திவிக, தபெதிக தந்தை பெரியார் குறித்து அவதூறு: ஜன.22, 23-ல் ரஜினிகாந்த் வீடு முற்றுகை- திவிக, தபெதிக

    பொருளாளர்

    பொருளாளர்

    இந்த மாநாடு வேலூர் மண்டித்தெருவில் நடைபெற்றது.. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு தலைமை தாங்கினார்... திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

    தாய்நாடு

    தாய்நாடு

    அப்போது துரைமுருகன் பேசியபோது, "நீங்க இந்த நாட்டில் பிறந்தவர்கள்... இந்தியா உங்கள் தாய்நாடு.. இந்த நாட்டில் எத்தனையோ இனங்கள் இருக்கின்றன.. அதுபோல் நீங்களும் ஒரு இனம். மதத்தால் வேறுபட்டவர்கள், அவ்வளவுதான், வேறு ஒன்னுமில்லை.

    இஸ்லாமியர்கள்

    இஸ்லாமியர்கள்

    இந்த மாநாடு வேலூர் மண்டித்தெருவில் நடைபெற்றது.. அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு தலைமை தாங்கினார்... திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

    கூட்டணி

    கூட்டணி

    இதை தொடர்ந்து அழகிரி பேசும்போது,"திமுக, காங்கிரஸ் கூட்டணி பலமாகவே உள்ளது. இந்தக் கூட்டணி உடைந்த கண்ணாடி என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருந்தார்.. அதிமுகவில் செல்லூர் ராஜுதான் விஞ்ஞானி என்று பார்த்தால் ஜெயக்குமாரும் விஞ்ஞானியாகத்தான் இருக்கிறார்" என்று தமாஷாக கூறினார்.

    அமைச்சர் ஜெயக்குமார்

    அமைச்சர் ஜெயக்குமார்

    கூட்டணி விரிசல், கூட்டணியில் பிளவு என்று சில தினங்களுக்கு முன்பு பரபரப்பக்கப்பட்டது.. குறிப்பாக துரைமுருகனின் பேச்சுதான் சலசலப்பின் வீரியத்தை கூட்டி விட்டது.. ஆனால் அழகிரி, திமுக தலைவரின் சந்திப்பின்போதே இந்த புரளிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது. என்றாலும், இந்த மாநாட்டில் துரைமுருகனும்அழகிரியும் மேடையிலேயே கைகுலுக்கிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, மிச்சம் மீதியிருந்த அரசல் புரசல்களையும் அடித்து கொண்டு போய்விட்டது!

    English summary
    dmk senior leader duraimurugan and ks azhagiri accusation caa in vellore meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X