வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரத் மாதா கி ஜே vs பெரியார் வாழ்க.. வேலூர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர் நிதின் கட்கரி நிகழ்ச்சியில் பரபரப்பு .. | Nitin Gadkari talking about Cauvery issue

    சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழகம், கர்நாடகாவுடன் பல முறை பேசியும் வெற்றிகிடைக்கவில்லை என்று, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் நேற்று, வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    DMK shout slogans on Periyar in minister Nitin Gadkari function in Vellore

    அந்த நிகழ்ச்சியில் கட்கரி பேசியதாவது: தூத்துக்குடியில் காற்றாலை மற்றும், சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டதுடன், கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி, காண்லா, பாரதீப் ஆகிய துறைமுகங்களிலிருந்து, குறைந்த விலையில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த பரிசீலித்து வருகிறோம். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், ஒரு யூனிட் மின்சாரத்தை 2.50 ரூபாய் செலவில் தயாரிக்க முடியும்.

    ஆந்திர மாநிலம் கோதாவரியில் இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, திட்டம் வகுத்து செயல்படுத்தி உள்ளோம். ஆனால் தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழகம் மற்றும் கர்நாடகாவிடம் பலமுறை பேசியும் பலன் கிடைக்கவில்லை.

    ஆடு, கோழி பலியிட தடையா? இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா? திரிபுரா கொந்தளிப்புஆடு, கோழி பலியிட தடையா? இந்தியாவுடன் இணையும் போது தந்த வாக்குறுதியை மீறுவதா? திரிபுரா கொந்தளிப்பு

    காவிரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்தாலே தமிழகம்-கர்நாடகா இடையே தண்ணீர் பிரச்னை இருக்காது. காவிரி பிரச்னையில் இதுவரை பேச்சுவார்த்தைகளால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்வாறு கட்கரி தெரிவித்தார்.

    இதையடுத்து, கயிறு வாரியம் சார்பில் நடைபெற்ற 13 மாநிலங்களில் தொடங்கப்பட்ட கயிறு குழுமங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் கட்கரி பங்கேற்றார். கட்கரி கிளம்பி சென்றபோது, பாஜகவினர் வழக்கம்போல 'பாரத் மாதா கி ஜே' என்று கோஷமிட்டனர். அப்போது அங்கே வந்திருந்த வேலூர் திமுக எம்.பி., கதிர் ஆனந்தின் ஆதரவாளர்கள் பெரியார் வாழ்க என கோஷமிட்டனர். இதை கவனித்த கட்கரி புன்முறுவலுடன் அங்கேயிருந்து கிளம்பினார்.

    English summary
    Union Minister Nitin Gadkari said that Tamil Nadu and Karnataka have not succeeded in talking about the Cauvery issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X