வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிளி ஜோசியத்தை கையில் எடுத்த திமுக.. ஏலே பாண்டி நாகம்மாளுக்கு சீட் எடு!

கிளி ஜோசியம் மூலம் வேலூரில் திமுக வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர்.. கிளி ஜோசியத்தை கையில் எடுத்த திமுக-வீடியோ

    வேலூர்: ஏலே பாண்டி.. நாகம்மாள் என்ற பேருக்கு ஒரு சீட்டு எடுத்து குடுப்பா.." என்று சொல்லி கிளி ஜோசியம் பார்த்து திமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறார் ஒருவர்!

    வரும்5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக திமுக, அதிமுகவினர் பலவித யுக்திகளை பயன்படுத்தி மக்களை கவர்ந்து வருகின்றனர்.

    DMKs Killi Astrology in Vellore Constitution Election

    அதில் ஒன்றுதான் கிளி ஜோசியம். திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் போட்டோக்கள் அடங்கிய பேனர்களை தொங்கவிட்டு, அதற்கு அடியில் உட்கார்ந்து ஜோசியம் சொல்கிறார் ஒருவர். கிளியின் பெயர் பாண்டி.

    DMKs Killi Astrology in Vellore Constitution Election

    இந்த பாண்டியிடம் நிறைய பேர் ஜோசியம் கேட்டு வருகிறார்கள். நாகம்மாள் என்ற பேருக்கு ஒரு சீட்டு எடுத்து தா.. பாண்டி.. என்றதும், அந்த கிளி கூண்டில் இருந்துவெளியே வந்து ஒரு சீட்டை எடுத்து தருகிறது. அந்த சீட்டில் உள்ளவர் முக ஸ்டாலின். உடனே ஜோசியர், "உங்க ராசிக்கு தளபதியே வந்துட்டார்.. உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.. எல்லாம் நல்லது நடக்கும்" என்கிறார்.

    DMKs Killi Astrology in Vellore Constitution Election

    கதிர் ஆனந்த் ஜெயிச்சிட்டார்னா.. அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படும் என்று பாண்டி அதான் கிளி.. ஆரூடம் சொல்லிட்டு கூண்டுக்குள்ளே போய்விடுகிறது.

    DMKs Killi Astrology in Vellore Constitution Election

    கிளி ஜோசியம் மூலம் திமுகவினர் வாக்கு சேகரிப்பது பொது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது இதனை பொதுமக்கள் ஆர்வத்துடனும் வியப்புடனும் பார்த்து செல்கின்றனர்.

    English summary
    DMK party campaigns in Vellore Constitution election through Killi Josiyam and public love it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X