வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சில்லித்தனமா பேசினா பதில் சொல்ல மாட்டேன்.. துரைமுருகன் சுளீர் பேச்சு!

சில்லித்தனமான விமர்சனத்துக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றார் துரைமுருகன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Durai murugan : சில்லித்தனமா பேசினா பதில் சொல்ல மாட்டேன் - துரைமுருகன்- வீடியோ

    வேலூர்: அதிமுகவின் சில்லித்தனமான விமர்சனத்துக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் காட்டமாக கூறியுள்ளார். திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுகவினர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு துரைமுருகன் இவ்வாறு பதிலளித்தார்.

    வேலூர் மக்களவை தேர்தலையொட்டி, மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு பொருளாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கேஎன் நேரு, திமுக எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்றனர் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை துரைமுருகன் சந்தித்தார்.

    ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க!!ஆத்தீ.. அத்திவரதரை சந்திக்க யார் வந்திருக்காங்க.. எங்க வந்து உட்கார்ந்திருக்காங்க பாருங்க!!

    பொய் பிரச்சாரம்

    பொய் பிரச்சாரம்

    அப்போது, திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக அதிமுகவினர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த துரைமுருகன், "திமுக பொய் பிரச்சாரம் செய்கிறதா? யார் பொய் சொல்கிறார், யார் உண்மை சொல்கிறார்கள் என மக்களுக்கு தெரியும். அதிமுகவின் சில்லித்தனமான விமர்சனத்துக்கு பதில் சொல்லி பழக்கப்பட்டவன் நான் கிடையாது.

    ஆலோசனை கூட்டம்

    ஆலோசனை கூட்டம்

    வருமானவரித்துறையினர் அவர்களது பணியை செய்கிறார்கள். இப்போ நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்கூட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்துதான் ஆலோசித்தோம். தேர்தலை நிறுத்த மீண்டும் முயற்சி செய்வதாக கூறிய ஏ.சி.சண்முகத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை" என்றார்.

    பொதுப்பணித்துறை

    பொதுப்பணித்துறை

    தொடர்ந்து துரைமுருகன் பேசும்போது, "தமிழக அரசு 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை வெளியேற்றுவது மிகப்பெரிய கொடுமை. பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஆயிரம் பேர் தற்காலிகமாக வேலை செய்கிறார்கள்.

    இதுவா சாதனை?

    இதுவா சாதனை?

    10 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் தற்காலிகமாக வேலை செய்தால் அவரை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. பொதுப்பணித்துறையில் நான் இருக்கும்போது நிரந்தரமாக்கி வந்தேன். அதன்பிறகு யாரையும் நிரந்தரம் செய்யவில்லை. இதுதான் இந்த அரசின் சாதனையே" என்றார்.

    English summary
    DMK Treasurer and Senior Leader Durai murugan has criticized AIADMK gov in Vellore Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X