வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது ஜனநாய படுகொலை.. மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.. துரைமுருகன் ஆவேசம்

இது ஜனநாய படுகொலை.. மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.. துரைமுருகன் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்துசெய்து உத்தரவு

    வேலூர்: வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளது, ஜனநாயக படுகொலை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

    வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு, கல்லூரி, பள்ளியில் கடந்த மாதம் 29,30 தேதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை தவிர அவருக்கு சொந்தமான நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.

    Durai Murugans opinion on Vellore Constitution election cancelled

     வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு

    இந்த சோதனைகளில் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. மேலும் இந்த தொகுதியில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதாகவும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது அது ரத்து செய்யப்பட்டு விட்டது.

    வேலூரில் தேர்தல் ரத்தாகி உள்ளது குறித்து துரைமுருகன் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து கருத்து சொல்லி உள்ளார். "இது ஒரு ஜனநாயகப் படுகொலை. தேர்தலை எந்தக் காரணமும் இல்லாமல் ரத்து செய்துள்ளனர்.

    மக்களின் நேரத்தை வீணடிக்கும் முயற்சியே இது. தேர்தல் ஆணையத்தின் முடிவில் அரசியல் அழுத்தம் கண்டிப்பாக உள்ளது. மோடியின் அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்" என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    English summary
    DMK Treasurer Durai murugan says about Vellore Election cancelled and condemns PM Modi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X