வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களுக்கு கஜானா வந்தால் போதும் என நினைக்கிறதா அரசு? துரைமுருகன் கேள்வி

Google Oneindia Tamil News

வேலூர்: மக்கள் செத்தாலும் சரி எங்களுக்கு கஜானா வந்தால் போதும் என நினைக்கிறதா அரசு என்று டாஸ்மாக் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கேள்வி.எழுப்பி உள்ளார்.

Recommended Video

    உங்களுக்கு கஜானா நிரம்பினால் சரி!-துரைமுருகன்

    கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையை தவிர தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இன்று முதல் தமிழகத்தில் அரசு மதுபான கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது,

     duraimurugan condemns tn govt open tasmac liquor shops in tamilnadu

    இதனை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், அணைகட்டு தி.மு.க எம்.எல்.ஏ ஏ.பி.நந்தகுமார் மற்றும் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டு முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் "கொரோனாவை தடுப்பதில் அரசு சரியான வழிமுறையை பின்பன்றவில்லை. தமிழகம் தற்போது ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கு கொரோனாவை பற்றி எதுவும் தெரியாது. ஏற்க்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திருக்க வேண்டும் ஆனால் தமிழக அரசு தவறிவிட்டது . கொரோனாவை விதைத்ததே கோயம்பேடு காய்கறி மார்கெட் தான். இந்த அரசுக்கு எதிலும் ஒரு தெளிவு இல்லை.

    அமைச்சர்களுக்குள்ளேயே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சொல்கிறார்கள். இது வரையில் சட்டசபையில் உள்ள எதிர்கட்சி தலைவர்களை கூட அரசு அழைத்து பேசவில்லை. கொரானா கணக்கெடுப்பை கூட அரசு சரியாக செய்யவில்லை. இனி மேலாவது நான்கு பேரின் யோசனையை கேட்டு அரசு நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    நமக்கு சரக்குதான் பிசினஸ்..நாமளும் கடையை தொறப்போம்..குடிமகன்களுக்கு புதுவை முதல்வரின் குட்நியூஸ்நமக்கு சரக்குதான் பிசினஸ்..நாமளும் கடையை தொறப்போம்..குடிமகன்களுக்கு புதுவை முதல்வரின் குட்நியூஸ்

    டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த துரைமுருகன், மக்கள் செத்தாலும் சரி எங்களுக்கு கஜானா வந்தால் போதும் என நினைக்கிறதா அரசு? என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்க்கு தேவையான நிதியை ஏன் கொடுக்கவில்லை என கேட்க தைரியம் இல்லை. போட்டதை வாங்கிக்கொள்கிறார்கள் என்றும் துரைமுருகன் கூறினார்.

    English summary
    tn govt open tasmac liquor shops in tamilnadu : duraimurugan condemns
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X