வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக அப்படித்தான்.. 7.5 % மட்டுமா? கொரோனா கூட மக்களுக்கு பாதிப்பில்லைனுதான் சொல்வாங்க.. துரைமுருகன்

Google Oneindia Tamil News

வேலூர்: 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது பாதிப்பில்லை என்பது மட்டுமில்லை எதுவுமே மக்களுக்கு பாதிப்பில்லை என்றுதான் கூறுவார்கள் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியில் திமுக சார்பில் உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட அவைதலைவர் சகி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Duraimurugan says that BJP will say corona also not affect to people

இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் திமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசுகையில் இதுவரையில் 18 லட்சம் உறுப்பினர்கள் திமுகவில் இணைய வழியில் சேர்க்கப்பட்டுள்ளது.

நேற்று வந்த அண்ணாமலைக்கு பதவி.. எச்.ராஜாவின் திடீர் கப்சிப்.. வந்து சேருமா அந்த நல்ல நேற்று வந்த அண்ணாமலைக்கு பதவி.. எச்.ராஜாவின் திடீர் கப்சிப்.. வந்து சேருமா அந்த நல்ல "செய்தி" !

மேலும் முன்னர் திமுகவை தேடி மக்கள் வந்து உறுப்பினர் சேர வேண்டும். ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பத்தால் மக்களை நாடி சென்று நாங்கள் திமுகவில் சேர்க்கிறோம். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு ஆளுநர் இன்னும் கையெழுத்திடாதது பாதிப்பில்லை என்று பாஜக கூறுவது தவறு.

Duraimurugan says that BJP will say corona also not affect to people

அவர்களை கேட்டால் எதுவுமே மக்களுக்கு பாதிப்பில்லை என்றுதான் கூறுவார்கள். கொரோனா கூட மக்களுக்கு பாதிப்பில்லை என்றுதான் கூறுகிறார்கள். பிளாஸ்டிக் ஆதார் அட்டை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும். திமுக இதுவரையில் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் துவங்கவில்லை என்று கூறினார்.

English summary
DMK General Secretary DuraiMurugan says that BJP has no bother about people, if it is 7.5% inter reservation or even corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X