வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்தார்கள், கேட்டார்கள், சம்பந்தம் இல்லை என்றோம்.. சென்றார்கள்.. அவ்வளவுதான்.. துரைமுருகன் பளீச்

Google Oneindia Tamil News

வேலூர்: வருமான வரித் துறையினர் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த சனிக்கிழமை வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது 10 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

அதுபோல் நேற்றைய தினம் வேலூரில் திமுக பிரமுகரின் சிமெண்ட் குடோனில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் நேற்று இரவு 8 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.

தேர்தல் பணிகள் தடுப்பு

தேர்தல் பணிகள் தடுப்பு

இதைத் தொடர்ந்து துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் வருமான வரிச் சோதனை என்ற பெயரில் 3 நாட்கள் எங்களது தேர்தல் பணிகளை முடக்கி வைத்துவிட்டனர். இப்படி தடுத்தால் நாங்கள் அஞ்சிவிடுவோம் என நினைத்துக் கொண்டுள்ளனர்.

சம்பந்தம் இல்லை

சம்பந்தம் இல்லை

இந்த வருமான வரிச் சோதனைக்கு ஒரே காரணம் அரசியல் உள்நோக்கம்தான். அதிகாரிகள் வந்தார்கள், கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கேட்டார்கள், எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றோம், கிளம்பிவிட்டார்கள்.

தலைவா நான் தீ குளிக்கட்டுமா? கோபமாக கேட்ட திமுக தொண்டர்.. துரைமுருகன் பதிலை பாருங்க! தலைவா நான் தீ குளிக்கட்டுமா? கோபமாக கேட்ட திமுக தொண்டர்.. துரைமுருகன் பதிலை பாருங்க!

தப்பு கணக்கு

தப்பு கணக்கு

2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை எவ்வாறு நிறுத்தலாம் என்று கணக்கு போட்டுள்ளனர். ஆனால் இது தப்பு கணக்கு. சோதனை என்ற பெயரில் என்னை அடித்தால் திமுகவினர் பயப்படுவர் என தப்புக் கணக்கு போடுகின்றனர்.

திட்டமிட்டு சோதனை

திட்டமிட்டு சோதனை

திமுகவின் வெற்றியை எவ்வாறு தடுக்கலாம் என திட்டமிட்டே என் வீடு, திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் வீடு போன்ற இடங்களில் இது போன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் அரசியல் அறிவு இல்லாதவர்கள் செய்துள்ளனர் என்றார் துரைமுருகன்.

English summary
DMK Treasurer Duraimurugan says that there is no connection for him and his family with the money seized by IT officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X