India
 • search
வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிடிவிய கோர்ட்ல நிக்க வச்சுருவோம்! சந்தர்ப்பவாதி சசிகலா..யார் சொல்றது தெரியுமா? கே.பி.முனுசாமி தான்!

Google Oneindia Tamil News

வேலூர் : டி.டி.வி தினகரன் தொடர்ந்து அவதூறு வதந்திகளை பரப்பி வந்தால் அவரை நீதிமன்றத்தில் நிற்க வைக்கும் நிலை வரும் எனவும், சசிகலா போன்றவர்கள் சந்தர்ப்பவாதிகள் ஆதாயம் போய்விட்டது என்பதற்காக இதுபோன்ற பிதற்றல்களை கூறிவருகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி.கடுமையாக விமர்சித்துள்ளார்.

  டிடிவிய கோர்ட்ல நிக்க வச்சுருவோம்! சந்தர்ப்பவாதி சசிகலா..யார் சொல்றது தெரியுமா? கே.பி.முனுசாமி தான்!

  வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில்வே மேம்பால புணரமைப்பு பணி முழுமையாக முடிவடையாத நிலையில் வேலூர் மாநகர் அதிமுக மாவட்ட செயலாளர் SRK அப்பு கடந்த 1-ம் தேதி பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வைத்தார்.

  நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3 நாளை ரொம்ப முக்கியம்.. என்ன பண்ணலாம்? விசாரித்த எடப்பாடி.. 3

  இது தொடர்பாக வருவாய் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்ஆர்கே அப்பு மீது பிணையில் வரமுடியாத பிரிவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  கே.பி.முனுசாமி பேட்டி

  கே.பி.முனுசாமி பேட்டி

  அவரை முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேப்பனஹல்லி எம்.எல்.ஏவுமான கே.பி.முனுசாமி சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," 11ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும் எடப்பாடிபழனிசாமி பொதுச் செயலாளர் ஆகியே தீருவார். ஆன்லைனில் பொது கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை ஏனென்றால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எங்களுக்கு அனுமதி அளித்துள்ளார்.

  டிடிவி தினகரன் மீது வழக்கு

  டிடிவி தினகரன் மீது வழக்கு

  பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை வைத்ததாக வைத்திலிங்கம் கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, வைத்திலிங்கம் எங்களோடு பயணித்தவர் அவர் இப்படிச் சொல்வது வேதனையாக இருக்கிறது. மேலும் அவர் விரக்தியில் இருக்கிறார் என கூறினார். மேலும் பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை ஈபிஎஸ் வளைப்பதாக டிடிவி தினகரன் கூறிவருறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம், மீண்டும் ஒருமுறை டிடிவி தினகரன் இப்படி சொன்னால் அவரை நீதிமன்றத்தில் நிற்க வைக்கும் சூழல் வந்துவிடும்.

  சந்தர்ப்பவாதி சசிகலா

  சந்தர்ப்பவாதி சசிகலா

  அவர் இந்த இயக்கத்துக்கு எந்த தியாகத்தையும் செய்யாதவர். இந்த கட்சியால் ஆதாயம் பெற்று சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர். அவருக்கு கட்சியை பற்றி பேச எந்தவித தகுதியும் கிடையாது. தகுதி இல்லாத நபர் மீண்டும் இதுபோன்று கூறினால் அவர் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும். சசிகலா பாவம் நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார் அவரை பற்றி பேச அவசியம் இல்லை. உண்மையாக உழைத்தவர்களை உயிர்தொண்டர்களை பிரிக்க முடியாது கட்சியினால் ஆதாயம் அடைந்த சந்தர்ப்ப வாதிகள், விரக்தியில் பேசி வருகிறார்கள்.

  பதற்றத்தில் பிதற்றல்

  பதற்றத்தில் பிதற்றல்


  சசிகலா போன்றர்கள் சந்தர்ப்ப வாதிகள் ஆதாயம் போய்விட்டது என்பதற்காக இதுபோன்ற பிதற்றல்களை கூறிவருகிறார்கள். தமிழகத்தில் உண்மையான எதிர்க் கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது, மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எடுத்து இருக்கும் பட்சத்தில் நடத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மதவாதத்தை கண்டு பயப்படுகிறார் இதுதான் உண்மை" என கூறினார்.

  English summary
  Edappadi Palaniswami's supporter KP munusamy severely criticized that people like Sasikala are opportunists saying such things because the gains are gone and If TTV Dhinakaran continues to spread defamatory rumours, he will be made to appear in court.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X