• search
வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அடங்காத ஆனந்தி.. அடுத்தடுத்து அபார்ஷன்கள்.. 2வது முறையாக குண்டாஸ்.. 20 வயது இளைஞரும் கைது!

|

வேலூர்: அபார்ஷன் ஆனந்தி மீது 2-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.. அவருக்கு உடந்தையாக இருந்த 20 வயது இளைஞரும் குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளார்.

ஆனந்தி.. பிளஸ் 2 படித்துவிட்டு டாக்டர் என்று ஊருக்குள்ளே சொல்லி கொண்டு திரிந்தவர். திருவண்ணாமலையில் இவர் பெயர் ஃபேமஸ்.

வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் ஒரு அப்பார்ட்மென்ட் உள்ளது. இங்குதான் அந்த டுபாக்கூர் டாக்டர் ஆனந்தி பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து அழிக்கும் மையம் நடத்தி வந்தார். இந்த தகவல் போலீசாருக்கு கடந்த டிசம்பர் மாதம் சென்றதையடுத்து விரைந்து வந்து அபார்ட்மென்ட்டை பார்த்தார்கள்.

ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்.. பலாத்காரம் செய்வதில் என்ன தப்பு.. இளைஞரின் திமிர் போஸ்ட்

ரகசிய ரூம்

ரகசிய ரூம்

அபார்ஷன் செய்றதுக்கு ஒரு தனி ரகசிய ரூம், அபார்ஷனுக்கு வரும் பெண்களை தங்க வைக்க 3 ரூம் இருந்ததை பார்த்ததும்தான் அதிர்ச்சி ஆனார்கள். விஷயம் ரொம்ப பெரிசு போல இருக்கே என்று தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்போது நிறைய சமாச்சாரங்கள் ஆனந்தி பற்றி வெளிவந்தது.

மொபைல் சர்வீஸ்

மொபைல் சர்வீஸ்

2016ம் ஆண்டு இப்படித்தான் அபார்ஷனுக்கு பெண்கள் வந்திருக்கிறார்கள். ஒன்றல்ல, ரெண்டல்ல, 9 பெண்களையும் வரிசையாக படுக்க வைத்து மயக்க மருந்து கொடுத்து, பின்னர் ஆபத்தான நிலைக்கு சென்ற அவர்களை போலீசார் சென்று மீட்டு கொண்டு வந்தனர். ஒருநாளைக்கு 25 அபார்ஷன்கள்கூட ஆனந்தி செய்திருக்கிறார். அதற்கு கட்டணமாக ரூ.60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலித்துள்ளார். அதாவது மாசம் ரூ.15 லட்சம் வரை சம்பாதித்துள்ளார் மொபைல் சர்வீஸ் மூலமாகவும் அபார்ஷன் நடந்திருக்கிறது என்கிறார்கள் போலீசார்.

ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர்

கடைசியில் ஆனந்தி உட்பட உடந்தையாக இருந்த அவரது கணவரும், ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கி போட்டது. இந்த ஆனந்தியால் ஆயிரக்கணக்கான சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. அதாவது 10 வருஷத்துல 19 ஆயிரம் கருக்கலைப்புக்கும் மேல இவர் செய்திருக்கிறார். ஆனந்தி & கோ..வினை கடந்த டிசம்பரில் கைது செய்தபிறகு அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனந்தி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகந்தி

சுகந்தி

பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஆனால் ஆனந்தி அடங்கவே இல்லை. திரும்பவும் வெளி மாவட்டங்களுக்கு சென்று பல பெண்களுக்கு அபார்ஷன்களை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து சுகாதார இணை இயக்குனர் சுகந்தி அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்யவும், பதுங்கி இருந்த ஆனந்தியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த நவீன்குமார் என்ற 20 வயது இளைஞரையும் கைதுசெய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

பரிந்துரை

பரிந்துரை

இதையடுத்து, தொடர்ந்து அபார்ஷன்களை செய்து வரும் ஆனந்தி, மற்றும் உடந்தையாக இருந்த நவீன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பி சிபி சக்ரவர்த்தி, கலெக்டர் கந்தசாமிக்குக்கு பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆனந்தி, நவீன்குமார் இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான நகல் ஜெயிலில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது. இப்போது அபார்ஷன் ஆனந்தி 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

 
 
 
English summary
thiruvannamalai fake woman doctor anandi arrested in gundas again
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X