வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உன் வீட்டுக்கு நான் வரணும்னா.. ரூ. 3500 கொடு... ராமக்காவின் அக்கப் போர்.. வெலவெலத்த வேலூர்

திருமண நிதியுதவி.. தம்பதியிடம் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமண நிதியுதவி.. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி-வீடியோ

    வேலூர்: "உன் வீட்டுக்கு நான் வரணும்ன்னா 3500 ரூபாய் தந்துடு" என்று திருமண நிதியுதவி பெற பெண் அதிகாரி ராமக்கா லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது!

    நம் மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்களின் திருமணத்துக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

    காட்டு பகுதியில்.. மல்லிகை ஃபார்ம்.. நண்பர் பெயரில் ரூம் எடுத்து தங்கிய ஜெயகோபால்..!காட்டு பகுதியில்.. மல்லிகை ஃபார்ம்.. நண்பர் பெயரில் ரூம் எடுத்து தங்கிய ஜெயகோபால்..!

    பெண்கள்

    பெண்கள்

    மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவி என்ற பெயரில் இது செயல்படுத்தப்பட்டு, இதற்காகவே இந்த திட்டத்தில் 2 பிரிவுகள் உருவாக்கப்பட்டு, அதன்படியே நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இளம் பெண்கள் பலனடைந்தும் வருகிறார்கள். ஆனால், அரசு இப்படி தரும் உதவி தொகைக்குகூட லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ஏழை குடும்பம்

    ஏழை குடும்பம்

    இதில் ஒரு பெண் அதிகாரி இப்போது சிக்கியுள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அங்கநாதவலசை பகுதியைச் சேர்ந்த தம்பதி குமரேசன்-சத்யா. ரொம்பவும் ஏழ்மையான குடும்பம். இவர்களுக்கு போன வருஷம்தான் கல்யாணம் ஆனது. அதனால் திருமண நிதியுதவியை பெற கந்திலி ஒன்றிய திருமண திட்ட விரிவாக்க அலுவலர் ராமக்கா என்பவரிடம் விண்ணப்பித்து இருக்கிறார்.

    நேரில் ஆய்வு

    நேரில் ஆய்வு

    ஆனால், இந்த ராமக்கா எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்தே வந்துள்ளார். "உங்க வீட்டுக்கு வந்துதான் இதை பற்றி நேரில் ஆய்வு செய்யணும், ஆட்டோவில்தான் உன் வீட்டுக்கு வந்து போவேன். அதனால எல்லாத்துக்கும் சேர்த்து 3,500 ரூபாய் தந்துடுங்க" என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த குமரேசனோ, "அவ்வளவு வசதி இல்லையே மேடம்... வசதி இருந்தால் நான் ஏன் உதவி தொகை கேட்க போகிறேன்" என்று சொல்லி உள்ளார்.

    வீடியோ

    வீடியோ

    ஆனாலும் ராமக்கா, அந்த 3500 ரூபாயில் இருந்து ஒரு சல்லி பைசா கூட குறைக்கவில்லை. வேறு வழியில்லாமல், குமரேசன் தம்பதி பணத்தை திரட்டி ஆபீசுக்கு சென்று ராமக்காவிடம் லஞ்ச பணத்தை தந்தனர். அப்போது கூடவே செல்போனில் இதை தெரியாமல் வீடியோவும் எடுத்து விட்டனர்.

    வைரல்

    வைரல்

    பணத்தை வாங்கிய ராமக்கா, பணம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை எண்ணி பார்த்து கொள்கிறார்.. பிறகு ஹேண்ட்பேகில் வைத்து கொண்டு, "போன் நம்பர் எழுதிக்கோப்பா.. நாங்களே உங்களை கூப்பிடுவோம்" என்கிறார். விடாப்பிடியாக பேசி.. ராமக்கா லஞ்சம் வாங்கின இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

    English summary
    TN Government Officer getting Rs.3,500 for marriage help to poor near Vellore and this video goes viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X