வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம்.. வணிகவளாகம் கட்ட எதிர்ப்பு.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் கோட்டை அருகில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தொல்லியல் துறை, வேலூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயநகரப் பேரரசரால் 16ம் நூற்றாண்டில் 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட வேலூர் கோட்டை, தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

hc issues notice to vellore collector on smart city scheme

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டை அகழியில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நேதாஜி மார்கெட்டை இடித்து விட்டு, 219 கோடி ரூபாய் செலவில் இரண்டு மாடி வணிக வளாகம் அமைக்க வேலூர் மாநகராட்சி ஒப்பந்த புள்ளிகள் கோரியுள்ளது.

கணவர் குடும்பத்தின் தொடர் டார்ச்சர்.. தாங்க முடியாமல் தவித்த நிஷா.. கிச்சனில் தூக்கில் தொங்கினார்!கணவர் குடும்பத்தின் தொடர் டார்ச்சர்.. தாங்க முடியாமல் தவித்த நிஷா.. கிச்சனில் தூக்கில் தொங்கினார்!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியில் வணிக வளாகம் கட்ட தடை விதிக்க கோரி வேலூரைச் சேர்ந்த பசுமை பாதுக்காப்பு சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொல்லியல் துறை அனுமதி பெறாமல் நேதாஜி மார்க்கெட் இப்பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 26ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தொல்லியல் துறை, வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வேலூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

English summary
Madras HC has issued notice to Vellore collector on smart city scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X